தந்தைக்காக தாயை ஒதுக்கிய இனியா தற்பொழுது பாக்யா இல்லாமல் அவதிப்படும் நிலை.! பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய எபிசோட்..

baakiya-lakshmi-serial-18
baakiya-lakshmi-serial-18

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கயல் சீரியல் தொடர்ந்து டிஆர்பி-யில் பல மாதங்களாக முன்னிலையில் இருந்து வந்த நிலையில் தற்பொழுது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் அதனை முறியடித்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் கோபி மற்றும் ராதிகாவின் உறவைப் பற்றி பாக்கியாவிற்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் தெரியவந்தது மேலும் பாக்யா ஒட்டுமொத்த குடும்பத்தின் முன்பும் கோபியை நிக்க வைத்து கேள்வி கேட்டார்.

டிவோர்ஸ் பேப்பரை பார்த்தவுடன் இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் தற்பொழுது தனது ஆபீஸில் தங்கி வருகிறார். இவ்வாறு பாக்யா வீட்டை விட்டு வெளியேறியதால் ஒட்டு மொத்த குடும்பத்தினர்களும் கவலையில் இருந்து வருகிறார்கள் மேலும் பாக்யா செல்வி அழைத்துக்கொண்டு ராதிகாவை பார்ப்பதற்காக செல்கிறார்.

ராதிகாவிடம் ஏன் இப்படி பண்றீங்க எனக்கு துரோகம் செஞ்சிட்டீங்களா என கூறுகிறார். இவ்வாறு போவதைப் பார்த்தால் ராதிகா பாக்கியாவிற்கு எதிராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கோபி தனது குடும்பத்தில் இருப்பவர்களை வெறுத்தாலும் அவருக்கு இனியாவை மிகவும் பிடிக்கும்.

அதேபோல் இனியாவிற்கும் தனது அம்மாவிடம் கோபியை தான் ரொம்ப பிடிக்கும்.  இருந்தாலும் பாக்கியா வீட்டை விட்டு வெளியேறியதை தாங்கிக் கொள்ள முடியாத இனியா கோபியிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அதாவது அம்மாவை உங்களுக்கு பிடிக்காது என்று தெரியும் ஆனால் அம்மாவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டீங்க உங்க முகத்துல முழிக்கவே எனக்கு பிடிக்கல என்கிட்ட பேசாதீங்க என கோபியை இனியா வெறுத்து ஒதுக்குகிறார்.

இதன் காரணமாக தனது மகளை இப்படி தன்னை வெறுப்பதால் நாம அந்த அளவிற்கு நடந்து கொண்டுள்ளோம் என நினைத்து வருகிறார். பிறகு ஜெனியிடம் இனியா தனது அம்மாவை பற்றி பேசுகிறார்.  அதாவது நான் எவ்வளவு திட்டினாலும் உடனே வந்தேன் அம்மா என்னிடம் பேசுவாங்க.  அவங்க இப்படி வீட்டை விட்டுப் போனது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அம்மா எப்ப வீட்டுக்கு வருவாங்க என ஜெனிடம் கேட்கிறார்.

பிறகு ஜெனியும் சீக்கிரமே வந்து விடுவாங்க எனக்கூறு இனியாவை சமாதானப்படுத்துகிறார். இவ்வாறு தந்தைக்காக தாயை வெறுத்து வந்த இனிய தற்போது அம்மாவின் உண்மையான பாசத்தை புரிந்து கொண்டார். இவ்வாறு பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது.