ராதிகாவின் வீட்டிற்கு சென்ற பாக்யா.. இனியாவை தொடர்ந்து கோபியை கேள்வி கேட்கும் செழியன்.! பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வார எபிசோட்..

baakiya-lakshmi-serial-16
baakiya-lakshmi-serial-16

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்ளுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் டிஆர்பி-யில் முன்னணி வைத்து வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.

தொடர்ந்து சில மாதங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் டிஆர்பி-யில் முதலிடத்தை வகித்து வந்தது ஆனால் தற்பொழுது விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கயல் சீரியலை ஓவர் டேக் செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

அதற்கு முக்கிய காரணம் பாக்கியாவிற்கு கோபி மற்றும் ராதிகாவின் உறவை பற்றி தெரியாமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது ஒட்டுமொத்த குடும்பத்தினர்களுக்கும் தெரியவந்துள்ளது.  மேலும் இப்படிப்பட்டவருடன் இனிமேல் வாழ மாட்டேன் என வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

தற்பொழுது ஆபீசில் தங்கி வருகிறார். இவருக்கு துணையாக  எழில் இருந்து வருகிறார் மேலும் அனைவருக்கும் பாக்யா எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்து வந்த நிலையில் சாந்தி உண்மையை கூறுகிறார்.  பிறகு இனியா கோபியை சந்தித்து நீங்களா இப்படி செய்தீர்கள் என்று கேட்டு சண்டை போட்ட நிலையில் இவரைத் தொடர்ந்து செழியன் ரூமிற்கு செல்கிறார்.

கோபியிடம் கோபியிடம்  நீங்களா இப்படி என கேட்க கோபி அதை இதை சொல்லி சமாளிக்கிறார். பிறகு பாக்கியா சாந்தியை தன்னுடன் அழைத்துக் கொண்டு ராதிகாவை பார்ப்பதற்காக அவரை வீட்டிற்கு செல்கிறார். அங்கு ராதிகாவை பார்த்தவுடன் அப்படியே நின்று கொண்டிருந்த பாக்கியா பிறகு உங்களை எவ்வளவு நான் நம்பினேன் இப்படி நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்களே என்று கூறி அழுகிறார்.  இதுதான் இந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பாக இருக்கிறது.

இவ்வாறு போவதைப் பார்த்தால் பாக்யாவை சமாளித்த பிறகு பாக்கியாவே தன்னுடைய முன்னிலையில் ராதிகா மற்றும் கோபிக்கு திருமணம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதற்கு முக்கிய காரணம் ராதிகா வாழ்க்கையில் நடந்த அனைத்து விஷயங்களும் பாக்கியாவிற்கு தெரியும் மேலும் மையூவிற்காகவும் இதனை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.