கோபியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் இனியா.! பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்..

baakiya-lakshmi-serial-15
baakiya-lakshmi-serial-15

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது எதிர்பாராத பல திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகைகள் பல மாதங்களாக ராதிகா மற்றும் கோபியை பற்றிய உறவுகள் பாக்கியாவிற்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் தெரியவந்துள்ளது.

அதாவது மருத்துவமனையில் ராதிகா மற்றும் கோபி இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த பாக்கியா தனது ஒட்டுமொத்த குடும்பத்தினர் முன்பும் கோபியை வைத்து அனைத்து உண்மைகளையும் தெரிய வைத்து வீட்டை விட்டு வெளியேறிவுள்ளார்.

மேலும் பாக்கியா இதற்கு மேல் இந்த வீட்டில் வரமாட்டேன் என்று கூற ஒட்டு மொத்த குடும்பமும் சோகத்தில் இருந்து வருகிறது. இவ்வாறு இது ஒரு பக்கம் இருக்க மற்றொருபுறம் ராதிகா நான் வெளியூர் போறேன் என்று கூற அவருடைய அம்மா மற்றும் அண்ணன் உனக்கு கோபி பிடிச்சிருக்கா இல்லையா என கேட்கிறார்கள்.

பிடிச்சது ஆனா இப்போ இல்லை என்று கூறுகிறார் பிறகு ராதிகாவின் அம்மா உனக்காக அவர் குடும்பத்தையே விட்டு வர தயாராக இருக்கிறார் ஏன் இப்படி பண்ற நீ கோபி தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் இதுதான் மயூவுக்கும் உனக்கும் நல்லது என்று கூறுகிறார்.

பிறகு ராதிகா என்ன சொல்வது என்று யோசித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது பாக்கியா ஆபிஸ்சில் வருகிறார். மேலும் எழில் மற்றும் செல்வி இருவரும் பாக்கியாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். பாக்கியம் காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை என்பதால் செல்வி டீ போட்டு தர எழில் குடிமா என்று கூற பாக்யா குடிக்கிறார்.

பிறகு இனியா கோபியின் ரூமிற்கு சென்று ஏன்பா இப்படி எல்லாம் பண்ணுனீங்க நீங்கதான் இப்படி பண்ணுனீங்களா என்பதை என்னால ஏத்துக்கவே முடியல எல்லாரையும் விட்டுட்டு போலானு முடிவு பண்ணிட்டீங்களா.

உங்களுக்கு என் மேல பாசமே இல்ல என்னால நம்ப முடியல என்னிடம் முதல்ல மயூரி தான் எங்க அம்மா ஒருத்தர் வர கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு சொன்னா அவங்களுக்காக என்ன தனியா விட்டுட்டு போறான்னு நினைச்சிட்டீங்கள என்று கூற பிறகு இல்லமா என் கூட உன்னை மாதிரி போலான்னு தான் நினைச்சேன் அதுக்கு தான் முன்னாடி என் கிட்ட நான் எங்க கூப்பிட்டாலும் நீ வருவியான்னு கேட்டீங்களா என்று கேட்கிறாய் இதுதான் இன்றைய எபிசோடில் ஒளிபரப்பாக இருக்கிறது.