விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. சமீப காலங்களாக இந்த சீரியலின் எபிசோட் ராதிகா மற்றும் கோபியின் உறவைப் பற்றி எப்படி பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. இதனைப்பற்றி தெரிந்துக்கொண்ட பிறகு பாக்யா எப்படி எடுத்துக்கொள்வார் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் கோபி மற்றும் ராதிகா இருவரும் பேசிக் கொண்டிருப்பதை அறிந்துக்கொண்ட பாக்கியா இவர்கள் திருமணம் செய்து கொள்ளப் போவதை அறிந்து கொண்டார். பிறகு கோபி வீட்டிற்கு வந்தவுடன் கோபியை நிக்க வைக்க ஒட்டுமொத்த குடும்பத்திற்கு முன்பும் அனைத்து உண்மைகளையும் கூறுகிறார்.
இவ்வாறு பாக்கியா அனைத்து உண்மைகளையும் சொன்ன பிறகும் கூட ஈஸ்வரி அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி எல்லாம் கோபி செய்ய மாட்டான் என்று கூறிவந்த நிலையில் டிவோர்ஸ் நோட்டீசை கோர்ட்டில் இருந்து அந்த நேரத்தில் அனுப்பி வைக்கிறார்கள்.
அதனை வாங்கிய எழில் படிக்க எழில் கோபி அடிக்க சொல்கிறார் ஆனால் பாக்கியம் அடிக்க கூடாது என்று கூற பிற ஈஸ்வரி அடிக்கிறார். பிறகு கோபி நான் செய்தது தப்பு தான் சாரி என பாக்யாவிடம் கூறுகிறார். பாக்யா சாரி என்ற ஒரு சின்ன வார்த்தையை கூறினால் அனைத்தும் சரியாகிவிடுமா என்று கூறுகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் இனிமேல் இந்த வீட்டில் என்னால் வாழ முடியாது என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். அனைவரும் பாக்கியாவை போக வேண்டாம் என்று தடுத்தாலும் பாக்கியா வீட்டை விட்டு செல்கிறார். தற்பொழுது பாக்யா நாளைக்கு டிவோர்ஸ்காக கோர்ட்க்கு வருவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.