விஜய் டிவி-யில் மிகவும் விருவிருப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் பாக்கியலட்சுமி. ஏராளமான திருப்பங்களுடன் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வகையில் பல எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது பல எபிசோடுகளாக கோபி பாக்யாவை எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறார் மேலும் ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக எப்படி எல்லாம் திட்டம் போட்டு வருகிறார் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வந்தது.
அந்த வகையில் ராதிகாவிற்கு பாக்யா தான் கோபியின் மனைவி என்பது தெரிய வந்த நிலையில் கோபியை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என வெறுத்து வந்தார். காரணமாக மும்பைக்கு போய் விட வேண்டும் என முடிவு செய்த நிலையில் கோபி அவர்களை போகவிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காக காரில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஆக்சிடென்டாகி விடுகிறது.
எனவே ராதிகா கோபியின் எனக்கூறி மருத்துவமனையில் கோபியை அட்மிட் செய்கிறான். இது தெரிந்ததும் பாக்யா மருத்துவமனைக்கு வர ராதிகாவிடம் கோபி நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது, என்னை விட்டுப் போயிடாதே என்று கூறுகிறார். இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் பொழுது பாக்யா கேட்டு விடுகிறார்.
பிறகு கோபி வரும் வரையிலும் வீட்டிலேயே காத்து வந்த பாக்கியம் கோபி வீட்டிற்கு வந்ததும் கோபியை குடிக்க வைத்து அனைவரும் முன்பும் அனைத்து உண்மைகளையும் போட்டு உடைக்கிறார். பாக்கியா தொடர்ந்து கோபியை கேள்விக் கொண்டிருக்கும் நேரத்தில் விவாகரத்து பேப்பர் வீட்டிற்கு வந்துவிடுகிறது.
அதனை எழில் படிக்கிறார். உடனே கோபியை அடிக்க சொல்ல பாக்கிய அதனை தடுத்து விடுகிறார்.பிறகு ஈஸ்வரி பாக்கிய சொல்லும் பொழுது கூட இதனை நம்பவே இல்லை ஆனால் தற்பொழுது விவாகரத்து பேப்பர் வந்துவிட்டது என்று கூறி கோபியை தாறுமாறாக அடிக்கிறார். மேலும் உனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறது ஒரு பெண் பிள்ளை இருக்கிறது ஆனால் உனக்கு இன்னொரு கல்யாணம் கேட்கிறதா என்று கூறி அழுகிறார்.