ப்ரைம் டைமில் விஜய் தொலைக்காட்சி ஒலிபரப்பப்படும் நாடகம்தான் பாக்கியலட்சுமி இது ஒரு குடும்ப தொடராகும்,ஆனால் இந்த குடும்ப தொடரில் பல்வேறு பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கிறது, இதுதான் இந்த நாடகத்தின் தனிச்சிறப்பாகும்.
இந்த நாடகத்தன் ஒரு கதாபாத்திரமான கோபி செய்யும் பல தவறுகளால் பல்வேறு பிரச்சினைகள் அவரது குடும்பத்தில் ஏற்படும், மேலும் கோபியின் குடும்பத்தில் அவரது பையன் செய்யும் ஒரு சில செயல், மேலும் ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தி விடுமோ என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
தற்போது வெளியான ப்ரோமோ வில் கோபியின் தந்தையின் பிறந்த நாளையொட்டி ஸ்வீட் செய்ய பாக்கிய அமிர்தாவை அழைத்துவர எழிலை போக சொல்கிறார், அதைக்கேட்ட பாக்யாவின் மாமியார் இவன் இப்படி செய்கிறான்,இவன் இப்படி இருக்க அமிர்தாவின் மாமனார் இவனை மகன், மகன் என்று கூறுகிறார் இதெல்லாம் எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை என்று கூறுகிறார்.
மேலும் கோபி பாக்கியாவிடம் உன் நண்பர்களை யாரையும் பிறந்தநாள் விழாவிற்கு கூப்பிடாதே உறவினர்களை மட்டும் கூப்பிடு என்று கூறுகிறார், ஆனால் அதை கேட்காத பாக்கியா ராதிகாவிற்கு கால் செய்து என்னுடைய மாமனாருக்கு பிறந்தநாள், நீ கட்டாயம் வர வேண்டும் என்று கூற அவரும் நான் கட்டாயம் வந்து விடுகிறேன் என்று கூறுகிறார்.
இதை தொடர்ந்து ராதிகா வீட்டிற்கு சென்ற கோபியிடம் ராதிகா நாம் ஒரு பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் நீங்கள் ஃப்ரீயாக உள்ளீர்களா என்று கேட்கிறார் அதற்கு கோபி கண்டிப்பாக போகலாம் நான் ப்ரீ தான் என்று கூறுகிறார், ஆனால் எங்கு செல்கிறோம் என்று கேட்க டீச்சரின் மாமனாருக்கும் பிறந்த நாளாம் அதற்காக போகிறோம் என்று கூறுகிறார் ராதிகா இதனால் அதிர்ச்சியுடன் பார்க்கிறார் கோபி இத்துடன் ப்ரோமோவும் முடிவடைந்தது.