இரவு நேரத்தில் அமிர்தாவிடம் பேசியதால் எழிலின் மீது கோபப்படும் பாட்டு.! அடுத்தடுத்து வரவுள்ள ட்விஸ்ட்..

baakiyalakshmi-serial
baakiyalakshmi-serial

25 வருடங்களாக வாழ்ந்து வந்த மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலியை திருமணம் செய்ய ஆசைப்பட்டு வரும் கோபி தற்பொழுது ஏராளமான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறார். விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவினை பெற்று டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. ராதிகாவிற்கு பாக்கியா தான் கோபியின் கணவர் என்று தெரியாமல் இருந்து வந்த நிலையில் சமீபத்தில் அனைத்து உண்மைகளையும் ராதிகா தெரிந்து கொண்டார்.

மேலும் பாக்கியாவிற்கும் கோபியை பற்றி பல தகவல்கள் தெரியவந்துள்ளது. விரைவில் பாக்யாவே கோபி மற்றும் ராதிகா இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுப்பார் என்று தெரிய வருகிறது. ஆனால் ராதிகா டீச்சருக்கு துரோகம் செய்யக் கூடாது என்று கோபியை வெறுத்து வருகிறார்.

மேலும் மையூரியையும் இதற்குமேல் கோபிவுடன் பேசக்கூடாது நான் ஏமாந்தது போதும் நீ ஏமாற வேண்டாம் என்று கூறுகிறார். பிறகு இனியா கோபியிடம் ஸ்கூலில் எனக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு அதை பற்றி நீங்களே டீச்சரிடம் பேசுங்க என்று கூறுகிறார்.

தூங்க சென்று பொழுது தூங்காமல் கோபி உட்கார்ந்து வருவதால் பாக்கியா ஏன் தூங்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்க ஏன் உனக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கா என்று கோபியை கேட்கிறார் இல்லை இன்னும் தூங்காம இப்படி இருக்க மாட்டீர்களே அதான் கேட்டேன் என்று கூறுகிறார்.

மற்றொரு பக்கம் மிகவும் மகிழ்ச்சியாக அமிர்தாவிடம் எழில் பேசிக்கொண்டிருக்கிறார். அதனை பார்த்து விட்டு செழியன் தனது பாட்டியிடம் எவ்வளவு சந்தோஷமா ஒரு பொண்ணுகிட்ட இந்த நேரத்துல பேசிகிட்டு இருக்கான் பாருங்க என்று கூறுகிறார்.

உடனே எழில் நான் அமிர்தாவிடம் நான் பேசினேன் என்று கூற பாட்டி மிகவும் கோபமடைந்து இந்த நேரத்துல ஏன் பொம்பள புள்ள கிட்ட பேசுற என்று கூறி சண்டை போடுகிறார். அமிர்தாவும் சமீப காலங்களாக எழிலை காதலித்து வரும் நிலையில் அடுத்த ட்விஸ்ட் இவர்களை வைத்து தான் இருக்கிறது என்பது தெரியவருகிறது.