ராதிகாவிடம் பேசியதை பாக்கியாவிடம் தெரியாமல் உலறிய கோபி.! ராதிகாவை பற்றி உங்களுக்கு எப்படி தெரியும் என சந்தேகப்படும் பாக்கியா.!

baakiya lakshmi 21
baakiya lakshmi 21

விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணி அளவில் ஒளிபரப்பப்படும் நாடகம் தான் பாக்கியலட்சுமி, இந்த நாடகம் தவறு செய்யும் கணவனின் செயல்களால் மனைவி படும் பாட்டினை அழகாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது மேலும் தவறு செய்யும் கணவன் படும் பாட்டையும் நன்கு எடுத்துக் கூறி இதனால் குடும்பத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளை மக்களிடையே தெளிவாக உணர்த்துகிறது.

ஒரு நாடகத்தில் பிரச்சினை இருக்கலாம் ஆனால் பிரச்சினையே நாடகமாக இருந்தால் என்ன செய்வது இப்படித்தான்,கடந்த சில மாதங்களாக இந்த நாடகம் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது அதில் கோபி பல பிரச்சினைகளில் சிக்கி எப்படியோ மாட்டிக்கொள்ளாமல் சிறு சந்தேகத்துடன் தப்பித்து விட்டார்.

ஆனால் “பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்ற பழமொழிக்கு ஏற்ப தொடர்ந்து தவறுகளை செய்பவன் ஒரு நாள் மாட்டிக் கொள்வான் என்பது தான் உண்மை அதைப்போல கோபியும் கண்டிப்பாக மாட்டிக் கொள்வார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

தற்போது வெளியான பாக்கியலட்சுமி வீடியோவில் கோபி தன் மனைவியிடம் “நீ ஏன் என்னை மற்றவர்களிடம் சென்று குறை கூறுகிறாய்??, நான் உன்னுடன் வரவில்லை என்று சொன்னாயாமே ஏன் அப்படி கூறினாய்?? என்று கூறுகிறார்,அதற்கு நான் யாரிடமும் சொல்லவில்லை உங்களுக்கு எப்படி தெரியும் நான் ஏதும் சொல்லவில்லையே என்று கூறுகிறார்.

அந்த கணமே கோபி ஆஹா நம்ம மாட்டிப்பமோ என்று பதறுகிறார்.அதன் பிறகு கோபியின் மனைவி நான் இதை ராதிகாவிடம் மட்டும் தான் சொன்னேன் உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்கிறார் அதற்குள் கோபி அவரை மழுப்பி விட்டு திரும்பி படுத்துக் கொள்கிறார்.

அதன்பிறகு நீயும் அவளுடன் சேர்ந்து ஒரு உளருவாயாக மாறிவிட்டாய் கோபி என்று கூறிவிட்டு பதட்டத்தில் படுக்கிறார் அந்த சமயம் ராதிகாவிடம் இருந்து கால் வருகிறது அதை பார்த்தவுடன் மேலும் பதற்றமடைந்து காலை அட்டன்ட் செய்யாமல் மியூட் செய்து படுத்துக் கொள்கிறார், மேலும் பாக்கியா இவருக்கு எப்படி தெரியும் என்று குழப்பத்துடன் உள்ளார்.