விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது இப்படிபட்ட நிலையில் தற்போது பாக்கியா எந்த தவறும் செய்யாத போதும் அவரின் மீது பழி ஏற்பட்டு பிஸனஸை இழுத்து மூடும் அளவிற்கு வந்துள்ளது.
எனவே தற்பொழுது எல்லாம் பொதுமக்கள் அனைவரும் பாக்கியாவிற்கு சமைக்க ஆடரை கொடுப்பதில்லை எனவே மனம் வருத்தத்தில் இருந்த வந்த நிலையில் கோபியும் இதற்கு மேல் பிசினஸ் செய்ய வேண்டாம் வீட்டிலேயே குடும்பத்தை பார்த்துகிட்டு சமைக்கிற வேலையை பார் என்று கூறிவிட்டான்.
அதனை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என குழப்பத்தில் இருந்து கொண்டிருக்கும் பொழுது எழிலுக்கு ஒரு நல்ல யோசனை வருகிறது.அதாவது பாக்யாவின் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வருவது அவரது காலை உணவாக தயாரிக்கிறார். அப்பொழுது எழில் பாக்கியாவிடம் போய் ஒரு மணி நேரத்திற்கு முன்பு எத்தனை வகையான உணவை சமைக்கலாம் என்று கேட்கிறான்.
அதற்கு பாக்கியா சுமார் 30 வகையான உணவுகளை சமைக்க முடியும் என்று கூறுகிறாள். உடனே பாக்கியா சமைத்த தொடங்க அதனை அனைத்தையும் வீடியோ எடுத்து எழில் யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கி பதிவிடுகிறேன். மீண்டும் பாக்கியா சாம்பாரிக்க ஆரம்பித்து விடுவாள் என நம்புகிறான் எழில்.
இவ்வாறு இதன் மூலம் மீண்டும் பாக்கியா வீட்டில் தலை நிமிர்ந்து நடக்க முடியும் என்றும் அனைத்து மக்களும் நம்புவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாக்கியாவும் எந்த கவலையும் இல்லாமல் இதற்கும் மேலாவது கொஞ்சம் சந்தோஷமாக இருப்பாள்.