விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகம் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வகித்து வருகிறது, இந்த நாடகத்திற்கு விஜய் தொலைக்காட்சி விருதுகள் வழங்கும் விழாவில் விஜய் தொலைக்காட்சி பல விருதுகளை வழங்கி உள்ளது சிறந்த தந்தைக்கான விருது ரோசரி என்பவருக்கும்,சிறந்த வில்லன் விருது சதீஷ் என்பவருக்கும்,துணை நடிகை விருது ரேஷ்மா என்பவருக்கும்,சிறந்த நாயகி என்ற விருது சுசித்ரா என்பவருக்கும்,சிறந்த இயக்குனர் விருது டேவிட் என்பவருக்கும், சிறந்த சீரியல் விருது பாக்கியலட்சுமி நாடகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்த இந்த நாடகம் மக்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் ஒரு நாடகமாகும். இந்த நாடகம் முழுக்க முழுக்க பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும், ஆண்கள் செய்யும் தவறுகளால் ஏற்படும் விளைவுகளை மக்களிடையே நன்றாக எடுத்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளது,கடந்த சில வாரங்களாக இந்த நாடகம் மிகவும் விறுவிறுப்பாகவும், டுவிஸ்ட்க்கு மேல் டுவிஸ்டாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இது ரசிகர்களை மிகவும் கவர்கிறது.
இந்த நாடகத்தின் கதை பிரியா என்னும் ஒரு பெண்ணினால் எழுதப்பட்டு வருகிறது, இதனால்தான் என்னமோ இந்த நாடகம் குடும்பத்தலைவியின் கதை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில்தான் விருதின் போது கோபியின் தந்தையிடம் தொகுப்பாளர்கள், கோபி உங்களிடம் மாட்டிக் கொள்வாரா? அடி வாங்குவாரா? என்று கேட்ட போது, அவர் ராதிகாவை திருமணம் செய்வார் அப்போது மொத்த குடும்பத்தினராலும் அடி உதை வாங்குவார் என்று கூறியுள்ளார். இதை வைத்தே முடிவு செய்துவிடலாம் ராதிகாவை கோபி நிச்சயம் திருமணம் செய்வார் என்று.