தானாக வந்து அரெஸ்ட்டாகும் கோபி.! ஆச்சரியப்படும் குடும்பத்தினர்கள்..

baakiya
baakiya

விஜய் டிவியில் குடும்ப இல்லத்தரசி கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி.  இந்த சீரியலில் இடம்பெற்று வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  சமீபத்தில் பாக்கியா செய்யாத தவறை செய்ததாக கூறி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக பாக்யாவின் பிசினஸ் மூடும் அளவிற்கு வந்துவிட்டது. எனவே கவலையில் இருந்து வரும் பாக்கியா எப்படியாவது இந்தப் பிரச்சினையில் இருந்து வெளி வந்து மீண்டும் தனது பிஸினஸை ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்து வருகிறார்.ஆனால் கோபி எந்த பிசினஸ்சும் செய்ய வேண்டாம் வீட்டிலேயே இருந்து சமைக்குற வேலையை பாரு என்று கூறியிருந்தான்.

எனவே வருத்தத்தில் இருந்த பாக்கியாவை எழில் தனது அம்மாவை எப்படியாவது மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று யோசித்து யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பாக்கியம் செய்யும் உணவுகளை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகிறான். இப்படிப்பட்ட நிலையில் கோவிலில் பாக்கியாவை ராதிகா சந்தித்து பேசுகிறாள்.

அப்பொழுது பாக்கியா மிகவும் வருத்தத்தில் எனது கணவர் இதற்கு மேல் எந்த சமையல் ஆடரையும் எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டார் என கூறுகிறாள்.பிறகு ராதிகா கோபியிடம் நாம் இருவரும் பாக்யாவின் கணவரை நேரில் சந்தித்து பேசுவோம் என்று கேட்கிறாள்.

கோபி எவ்வளவு கூறியும் ராதிகா கேட்காத காரணத்தினால் வீட்டிற்கு வந்த கோபி இதற்குமேல் உன் பிசினஸை ஆரம்பிக்கலாம் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் பாத்துக்கலாம் பிசினஸ் என்றால் பிரச்சினை வரத்தான் செய்யும் என்று கூறுகிறான் எனவே குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.