விஜய் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இந்த நாடகம் ஒரு குடும்பத் தலைவியை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் நாடகமாகும்.
விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சி இந்த நாடகத்திற்கு பல விருதுகளை வழங்கி சிறப்பித்துள்ளது, முக்கியமாக இந்த நாடகத்தில் வில்லன் போல் நடித்து வரும் கோபிக்கு சிறந்த வில்லன் விருது வழங்கப்பட்டது,இப்படியெல்லாம் இருக்க இந்த நாடகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமான கோபி, மேலும் மேலும் பல தவறுகளை செய்வதால் எப்போது சிக்குவார் என்று நாடகத்தைப் பார்க்கும் அனைத்து மக்களாலும் எதிர்பார்க்கப்படும் ஒன்று.
இந்நாடகத்தின் இயல்பை புரிந்து கொள்ளாத சில மக்கள் கோபியை திட்டி தீர்த்து வருகிறார்கள். என்னதான் எவ்வளவு பிரச்சனை நடந்தாலும் “கோபி ராதிகாவை திருமணம் செய்யாமல் விட மாட்டார் போல” என நினைக்கும் ரசிகர்கள் ஒரு பக்கமும் எப்பொழுது ராதிகாவை கோபி திருமணம் செய்வார்? எப்பொழுது நாடகம் உச்ச கட்டத்திற்கு செல்லும்? என்று மறுபக்கம் மீதி ரசிகர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில்தான் கோபி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் அவர் கூறுவது என்னவென்றால் “நான் ஒரே ஒரு தவறு செய்துவிட்டேன் எனது முன்னாள் காதலியை மீண்டும் காதலித்ததுதான் கோபியின் இவ்வளவு கஷ்டத்திற்கு காரணம்” என்று கூறியுள்ளார்.
என்னதான் நாடகத்தின் கதாபாத்திரம் தவறானதாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் தன்னுடைய முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடித்துள்ளார் சதீஷ், அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட பதிவு ரசிகர்கள் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.