விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் சில வாரங்களாக அனைத்து சீரியல்களிலும் ஏராளமான டுவிஸ்ட்களை வைத்து வருவதால் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வரும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தலைவி எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்பதை மையமாக வைத்து ஒலி பரப்பி வருவதால் இல்லதரசிகள் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.
சுமார் 25 வருடங்களாக வாழ்ந்து வந்த தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனது கல்லூரி காதலியை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறான் கோபி. எழில் மற்றும் கோபியின் அப்பா இருவருக்கும் இந்த உண்மை தெரிந்தும் அதனை குடும்பத்திலுள்ளவர்களிடம் சொல்லாமல் மனதிற்குள் வைத்து புழுங்கி வருகிறார்கள்.
இவ்வாறு போய்க்கொண்டிருக்கும் நிலையில் திடீரென்று ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கென்று பாக்கியா செய்த உணவில் விஷம் கலந்திருப்பதாக கூறி போலீசார்கள் ஜெயிலில் அடைத்து இருந்தார்கள். எனவே இதனைப் பற்றி தெரிந்தும் கோபி தனது காதலி ராதிகாவிற்கு மட்டும் உதவி செய்து விட்டு பாக்கியாவை அம்போ என்று விட்டு விட்டார்.
பிறகு எழில் தான் அம்மா செய்த உணவில் எந்த ஒரு குறையும் இல்லை லட்டில் தான் குறை இருக்கிறது என்று கூறி எனது அம்மாவை வீட்டிற்கு அழைத்து வந்தான். பிறகு கோபி இரவு முழுவதும் ராதிகாவுடன் இருந்து விட்டு காலையில் வருகிறான் அப்பொழுது கோபியின் அப்பா பளார் பளார் என்று நான்கு முறை அறைகிறான்.
இப்படி போய்க் கொண்டிருந்த நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட கோபி தற்பொழுது பாக்கியாவை எந்த ஒரு வேலைக்கும் போக கூடாது என்று கூறி மிகவும் கடுமையாக திட்டுகிறார் வீட்டைவிட்டு வெளியே அனுப்பாமல் இருந்தால் அவன் செய்யும் எந்த தவறும் வெளியில் வராது என்று நினைக்கிறான் எனவே இப்படி ஒரு நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறான்.