அடிப்பட்டு வீல் சேரில் கோபி.. காரணம் ராதிகாவா.? வைரலாகும் புகைப்படம்

baakiyalakshmi-13

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் சதீஷ். இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியல் மக்கள் மத்தியில் இந்த அளவிற்கு பிரபலம் அடைவதற்கு முக்கிய காரணம் கோபி, பாக்கியா கேரக்டர்தான். குடும்பத் தலைவியான பாக்கியா தனது குடும்பத்திற்காக பல சேவைகளை செய்து வருகிறார்.

மேலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வரும் நிலையில் தனது கணவர் கோபியால் அனைத்திலும் முடக்கப்பட்டு அசிங்கப்படுகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் கோபி ராதிகா என்ற தனது கல்லூரி காதலியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு பாக்யாவை விவாகரத்து செய்துக் கொள்கிறார்.

இவ்வாறு பாக்கியா தொடர்ந்து பிசினஸில் கலக்கி வரும் நிலையில் முன்பு இருந்ததை விட தற்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபி ராதிகா இருவரும் பாக்யாவின் வீட்டில் தங்கி வருகின்றனர். இவ்வாறு இரண்டாவது முறையாக ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்ட ராதிகாவை கோபி வேறுத்து வரும் நிலையில் தொடர்ந்து குடித்து வருவதோடு மட்டுமல்லாமல் ராதிகாவை அசிங்கப்படுத்தியும் வருகிறார்.

sathish
sathish

உன்னால் தான் சந்தோஷமே போச்சு நிம்மதியே இல்லை என கூறிவரும் நிலையில் தற்பொழுது கோபி வில் சேரில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. எனவே ரசிகர்கள் கோபிக்கு என்னதான் ஆச்சு என அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது தொடர்ந்து கோபி குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிறார்.

sathish 1
sathish 1

மேலும் தொடர்ந்து ராதிகாவும் சண்டை போட்டு வரும் நிலையில் இவ்வாறு இதனால் ஏதாவது கோபிக்கு ஆயிடுச்சா எனவும் அப்படி என்றால் பாக்கியலட்சுமி சீரியலில் மேலும் டிவிஸ்ட் இருக்கிறதா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கு கோபி “just for fun” நான் நன்றாக இருக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.