விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சில வாரங்களாக அனைத்து சீரியல்களிலும் டுவிஸ்டுகள் நிறைந்துள்ளது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு பாக்கியா அழைத்து சென்று ஒரு இரவு முழுவதும் பாக்கியாவிற்கும் அவருடைய குடும்பத்திற்கும் துன்பத்தை ஏற்படுத்தியது.
இவ்வாறு இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையை கூட தனது மனைவியுடன் இல்லாமல் அவளை ஜெயிலில் இருந்து மீட்க வேண்டும் என்று உதவி செய்யாமல் தனது காதலியுடன் அவளின் வீட்டிலேயே இருந்ததோடு மட்டுமல்லாமல் அவளை விட்டுப் பிரியாமல் அவருக்கு பக்கபலமாக இருந்தான் கோபி.
கோபியின் மகள் இனியா போன் செய்து பயமா இருக்குது வாங்கப்பா என்று கூறியும் வராமல் மறுநாள் காலையில் வந்தான். பிறகு பாக்யாவின் இரண்டு மகன்களும் பாக்கியா எந்த தவறும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் நிரூபித்து தற்போது அவனை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.
பிறகு கோபி காலையில் வந்ததும் அவனின் அம்மா கேள்விகேட்க வெளியூர் சென்றதாகவும் அதனால் என் வீட்டிற்கு வர முடியவில்லை என்றும் வாய் கூசாமல் பொய் கூறுகிறான். பிறகு ஆத்திரமடைந்த கோபியின் அப்பா கோபியை பளார் பளார் என்று நான்கு தடவை அடிக்கிறான். கோபி அதிர்ச்சியடைந்து அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறான்.
பிறகு பாக்கியாவை பார்த்து இதெல்லாம் உனக்கு தேவையா பேசாமல் சமையல் செய்து கொடுக்க வேலையை விட்டுவிட்டு குடும்பம் உண்டு வீடு உண்டு என இருந்து விடு என்று பாக்கியிருக்கு அறிவுரை கூறியதோடு மட்டுமல்லாமல் இனி நீ எந்த வேலையும் செய்ய வெளியே போகக் கூடாது என்று கண்டிஷன் போடுகிறான்.
இவ்வாறு கோபி சொல்வதைப் பார்த்தால் பாக்கியை அதிகமாக சம்பாதிக்க ஆரம்பித்தால் தனது பேச்சை கேட்காமல் தன்னை மிஞ்சி செயல்பட ஆரம்பித்து விடுவாள் என்ற பயத்தினால் தான் இப்படி கூறுகிறாரோ என்னவோ எனவே இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு கோபி கூறி வருகிறான்.ஆனால் எழில் அம்மாவிற்கு சப்போர்ட் ஆகவும் கோபி குடும்பத்தை விட்டுப் போகக்கூடாது என்றும் பல முயற்சிகளை செய்து வருகிறான்.