கோபி யாருக்கு என பஞ்சாயத்து கூட்டிய ராதிகா மற்றும் பாக்யா.! இது என்ன புதிய டுவிஸ்டா இருக்கு.. வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் சுவாரசியமான பல சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி.

விஜய் டிவியில் சமீப காலங்களாக ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் சூப்பர் ஹிட்  பெற்று  வருகிறது.அந்த வகையில் சன் டிவியின் சீரியல்கள் தொடர்ந்த டிஆர்பி-யில் முன்னணி  வகித்து வரும் நிலையில் தற்போது அதனை ஓவர் டேப் செய்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த சீரியலில் பாக்கியா கோபியை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ள நிலையில் ஈஸ்வரி ராதிகாவின் வீட்டிற்கு சென்று நீ நல்லா இருக்க மாட்ட நாசமா போயிடுவே என மண்ணை வாரி விட்டுவிட்டு வருகிறார்.பிறகு ராதிகா என்ன செய்வது என்று தெரியாமல் கோபியின் மீது மிகவும் கோபத்தில் இருந்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபியை ராதிகாவை ஏற்றுக் கொள்வாரா இருவரும் மகிழ்ச்சியாக பாடுவார்களா என்ற கேள்விக்குறி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலின் குழுவினர்கள் ராஜூ வூட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் பங்கு பெற்றுவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் உண்மை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் போல் வேடம் அணிந்து ராமர் வருகிறார்.

ராமரிடம் பாக்கியா மற்றும் ராதிகா இருவரும் பஞ்சாயத்தை சொல்கிறார்கள் அதில் முகமூடி போட்டு கொண்டு கோபியை போல் ஒருவர் வர அவரை போலீசார்கள் கைது செய்கிறார்கள்.இந்த ப்ரோமோ தான் சமீபத்தில் வெளியாகி உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் நிஜத்தில் இப்படி நடந்தால் கூட நல்லா இருக்கும் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.