விஜய் தொலைக்காட்சியில் டாப் சரியாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் இணைந்து மெகா சங்கமாக ஒளிபரபரப்பாகி ஓடிக்கொண்டிருக்கிறது. பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒரு குடும்ப சீரியலாக இருப்பதால் பாக்கியலட்சுமி யும் குடும்பம் சீரியலாக இருப்பதால் இரண்டு சீரியலுக்கும் ரசிகர்கள் நல்ல ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்த இரண்டு சீரியல்களும் தாத்தாவின் பிறந்தநாளுக்காக இணைந்து இவர்கள் செய்துவரும் அரட்டை ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனது இதில் கோபிக்கு உறுதியாக ஒரு பெரிய ஆப்பு காத்திருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இவ்வளவு நாளாக மறைத்து வைத்த கோபியின் ரகசியம் கூடிய சீக்கிரம் வெளி வர உள்ளது என்று தெரியவருகிறது.
இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு கோபியின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து எல்லோரும் கோபியை கண்காணித்து வருகிறார்கள்.கோபி செய்து வரும் ஒவ்வொரு செயலிலும் பதட்டம் இருக்கிறது. என்று தெரிய வந்தது அப்போது தனம், கதிர் மற்றும் மூர்த்தி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கோபியின் செயல் எதுவும் சரியில்லை ஏதோ தவறு செய்து வருகிறார். அதை கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டுமென்று மூன்றுபேரும் பேசி வருகிறார்கள் இனிமேல் தான் இருக்கு கோபிக்கு என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து தாத்தாவின் பிறந்தநாளன்று கோபி பூட்டி வைத்திருந்த பல உண்மைகள் தெரிய வருமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தெரிந்தால் பாக்யாவுக்கு தெரிய வர வாய்ப்புள்ளது. கோபியின் செயல் பாக்யாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று அந்த எபிசோடை பார்க்க ரசிகர்கள் பல எபிசோட்களாக காத்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் நடிப்பின் நாயகன் என்று கோபியை கமெண்ட் செய்து வருகிறார்கள். கோபிக்கு தனித்திறமை உள்ளது எப்படித்தான் இரண்டுபக்கமும் சமாளித்து வருகிறாரோ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். தாத்தாவின் பிறந்தநாள் அன்றுதான் எல்லா உண்மையும் தெரியப்போகிறது. அதை பொறுத்திருந்து பார்ப்போம்.