சோசியல் மீடியாவில் வைரலான பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

baakiyalakshmi
baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் வீடியோ மார்பிங் செய்யப்பட்டு சோசியல் மீடியாவில் வைரலான நிலையில் இது தெரிந்துக் கொண்ட நடிகை அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் தற்பொழுது கோபி பாக்கியாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். சமீப காலங்களாக இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் தொடர்ந்து விறுவிறுப்பான எபிசோடுகளும் ஒளிபரப்பாகி வருகிறது.

அந்த வகையில் கோபியின் 2வது மனைவியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் பாக்கியலட்சுமி சீரியலில் மட்டுமல்லாமல் இன்னும் சில சீரியல்களிலும் நடித்து பிசியாக இருந்து வருகிறார் இவ்வாறு சின்னத்திரையில் நடிப்பதற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு சொல்லும் அளவிற்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரைக்கு அறிமுகமானார். சின்னத்திரை இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா கேரக்டரில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து கோ 2, மணல் கயிறு 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது பெயரில் ஆபாச படம் வெளியானது குறித்து பேசி உள்ளார்.

அதில் அவர் நான் அமெரிக்காவில் இருக்கும் பொழுது என்னுடைய சகோதரி போன் செய்து உன்னுடைய அந்தரங்க வீடியோ வெளியானது என கூறினார். எனக்கு ஆளே இல்லையே எப்படி வந்திருக்கும் என்றேன் வீடியோவை எனக்கு அனுப்பி வை என்றேன் அந்த வீடியோவை பார்க்கும் பொழுது சத்தியமாக நான் இல்லை மார்பிங் செய்திருப்பதை எனது சகோதரிக்கு புரிய வைத்தேன் தயாரிப்பாளரான என் தந்தை, நடிகரான என் சகோதரர் சினிமா துறையில் இருந்ததால் புரிந்து கொண்டனர் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது சாதாரண பெண்ணுக்கு இப்படி நடந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் எனக் கூறி உள்ளார்.