விமானத்தில் செல்லும் பொழுது இடுப்பில் கை வைத்து சில்மிஷம் செய்த நபர்.! அதற்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகை செய்த தரமான சம்பவம்..

bakkiya laxmi
bakkiya laxmi

விமானத்தில் செல்லும் பொழுது இடுப்பில் கை வைத்து தடவிய நபரை கன்னத்தில் பளார் என அறைந்து விட்டதாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கூறி இருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பெண்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் ஒரு சில நபர்கள் தவறான பார்வையுடன் பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்கள் இருக்கின்றனர் எனவே பலருக்கும் இது போன்ற பிரச்சனை இருந்து வருகிறது.

அந்த வகையில் தான் சின்னத்திரை நடிகை திவ்யா கணேஷ் சமீப பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அதாவது சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் நடிகை திவ்யா கணேஷ்  இந்த சீரியலை தொடர்ந்து லக்ஷ்மி வந்தாச்சு, சுமங்கலி உள்ளிட்ட சூப்பர் ஹிட் பெற்ற சீரியல்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கேரக்டரில் தற்பொழுது வரையிலும் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவ்வாறு சீரியல்களில் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான அட்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்த இவர் பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

ஆனால் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு கை கொடுக்காத காரணத்தினால் சீரியலில் நடிப்பதை தொடர்ந்தார் அந்த வகையில் சீரியல்கள் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ரீச்சினை பெற்று தந்தது. இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டியில் திவ்யா கணேஷ் விமானத்தில் பயணிக்கும் பொழுது தனக்கு ஏற்பட்ட பாலியல் சீன்கள் குறித்து பேசினார். அதன்படி ஒரு நாள் இரவு நேரத்தில் ஹைதராபாத்திலிருந்து விமானத்தின் மூலம் சென்னை வரும்பொழுது என் இடுப்பில் ஏதோ ஓடுவது போன்று ஒரு உணர்வு இருந்தது.

இதனை அடுத்து பார்த்தபொழுது எதுவுமே இல்லை பின்னரும் அது போன்ற உணர்வு ஏற்பட்டது அப்போதுதான் ஒரு நபர் இந்த கேவலமான செயலை செய்தது தெரிய வந்தது. இதனால் செம டென்ஷன் ஆகிவிட்டேன் உடனடியாக எழுந்து அந்த நபருக்கு கன்னத்திலேயே நான்கு அரை பளார் பளார் என்று அறைந்து விட்டேன் பிறகு இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம் அந்த சமயத்தில் இதனை சகித்துக் கொண்டு கடந்து செல்லாமல் உடனடியாக அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.