விஜய் தொலைக்காட்சியில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பப்பட்டு வரும் நாடகம்தான் பாக்கியலட்சுமி, இந்த நாடகத்தில் வரும் கதாபாத்திரங்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளது.இந்த நாடகத்தில் கோபி தனது காதலி மற்றும் மனைவி இருவர்களிடமும் பல வேலைகளை காட்டி குடும்பத்தை ஒரு வழிக்கு கொண்டு வந்து விட்டார், முதலில் கோபியின் மனைவியும், காதலியும் இருவரும் ஒருவருக்கொருவர் யார் என்று தெரியாமல் பழகிக் கொண்டிருந்தனர்,
காலப்போக்கில் கோபி செய்யும் முட்டாள்தனமான விஷயத்தால் கோபி மாட்டிக்கொள்கிறார், இதை அடுத்து கோபியின் மனைவிக்கு இவரது காதலி யார் என்று தெரிகிறது அதேபோல் கோபியின் காதலிக்கும் இவரது மனைவி யார் என்று தெரிய வருகிறது.
இந்த சம்பவங்களுக்கு பிறகு சற்று நாடகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது,
பாக்யா தனது கணவன் கோபி செய்தது பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் குடும்பத்தில் உள்ள அனைவரும் இறங்கி கெஞ்சி பார்த்து விட்டனர் ஆனால் பாக்கியா இறங்கி செல்வதைப் போல் தெரியவில்லை, இந்நிலையில்தான் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து கொள்ள முடிவு எடுத்து விட்டார்,
இதன் பிறகு என்ன நடக்கும் என்ற ஆச்சரியத்துடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
என்னதான் இந்த நாடகத்தில் கோபி தவறானவராக இருந்தாலும் இவர் இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ளார், கோபி, மனைவியையும் சமாளித்து தன் காதலியையும் சமாளித்து ஒரு திறமையான மனிதராக வலம் வருகிறார் என்று ஒரு பக்கம் ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில்தான் கோபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மனைவி கீதா உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் இவ என்னோட மனைவி மட்டுமல்ல பெஸ்ட் ஃபிரின்ட், கார்டியன், கைடு, எல்லாமே இவதான், இவ இல்லனா நான் இப்படி இருந்திருக்க முடியாது, இவ எனக்கு தாரம் மட்டுமல்ல தாயும்தான்,என் வீட்டு தெய்வம் என்று தனது மனைவியை புகழ்ந்து கூறியுள்ளார், என்னதான் மனிதன் நாடகத்தில் வித்தியாசமாக இருந்தாலும் தனது நிஜ வாழ்க்கையில் தனது மனைவியே தெய்வம் என்று வாழ்ந்து வருகிறார் சதீஷ்.