சின்னத்திரைகள் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வரும் சீரியல்களில் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது. மேலும் இந்த சீரியல் மிகவும் சுவாரசியமாக எதிர்பாராத பல திருப்பங்கள் இருந்து வருவதால் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த சீரியலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்யாவின் கணவராக கோபி என்ற கதாபாத்திரத்தில் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்கள். இந்தத் தொடரின் கதையானது குடும்பப் பெண்கள் எல்லோரும் தனது குடும்பத்திற்காக எப்படி எல்லாம் தன்னுடைய ஆசைகளை தியாகம் செய்கிறார்கள் என்றும் எவ்வளவு கஷ்டங்கள் போராட்டத்திற்கு நடுவில் வாழ்கிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் சமீப காலங்களாக மிகவும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டுமே இந்த சீரியலின் டிஆர்பி எகிறிவுள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் எதிர்பாராத பல திருப்பங்கள் இருந்து வருவது தான். கடந்த சில மாதங்களாக கல்லூரி காதலி ராதிகா என்பவருடன் தொடர்பில் இருந்து வந்த கோபி எப்படியோ அனைவருக்கும் தெரியாமல் தப்பித்து வந்தார்.
ஆனால் தற்பொழுது பாக்யா உள்ளிட்ட அனைவருக்கும் கோபி மற்றும் ராதிகாவின் உறவை பற்றி தெரியவந்துள்ளது. இவர் ஹைலைட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் தனது சொந்த வாழ்க்கையில் நடந்த துயர சம்பவத்தை ரசிகர்களிடம் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
அதாவது அதில் நான் ஐந்து வயதில் என் தம்பியை இழந்தேன், ஒரு விபத்தில் பெற்றோரையும் இழந்துள்ளேன். ஒரு அனாதையாகவே சென்னைக்கு வந்தேன். அப்பொழுது என்னிடம் இரண்டு சட்டை மற்றும் இரண்டு டவுசர் தான் இருந்தது. என்னுடைய அத்தை வீட்டில் தான் வளர்ந்தேன்.
மேலும் எனக்கு தமிழ் சொல்லிக் கொடுத்து,வாழ்க்கையை கொடுத்து, வருமானமும் கொடுத்து என அனைத்தும் தமிழன் தான். தமிழ் என்பது ஒரு மொழி மட்டுமல்ல அது ஒரு கலாச்சாரம், மதம், ஒரு சக்தி, வாழ்க தமிழ் என உணர்ச்சி பொங்க பேசிவுள்ளார் சதீஷ்.
5 வயதில் பெற்றோரை இழந்தேன்.. பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ்#Baakiyalakshmi #Sathish #Gopi pic.twitter.com/VeYAhz6qk5
— Parthiban A (@ParthibanAPN) July 14, 2022