விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்தான் பாக்கியலட்சுமி சீரியல் இந்த சீரியலுக்கு மக்கள் நல்ல ஆதரவை கொடுத்து வந்தார்கள். அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் குடும்ப சீரியலாக இருப்பதால் இதற்கனவே ரசிகர்கள் குவிந்தனர். இந்த இரண்டு சூப்பர் ஹிட் சீரியல்களும் இணைந்து மெகா சங்கமாக அமைகிறார்கள். “கச்சேரி களை கட்டுது” என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து தாத்தா வின் 75வது பிறந்த நாளுக்காக பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தை பாக்கிய அழைத்து வந்தார். அப்பொழுது இவர்கள் செய்து வரும் செயல் எதுவும் கோபிக்கு துளிகூட பிடிக்கவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செய்துவரும் லூட்டிக்கு அளவே கிடையாது.இதில் கோபிக்கு ஒரு பக்கம் கவலை என்னவென்றால் இந்த குடும்பத்தின் மூலமாக ராதிகா பற்றிய விஷயங்கள் தெரிந்துவிடும் என்று பதட்டத்திலே இருக்கிறார்.
இந்நிலையில் பாக்கியா ராதிகாவை பிறந்தநாளுக்காக அழைப்பதற்கு தனத்தை அழைத்துக் கொண்டு போகிறார்.அங்கு ராதிகாவிடம் பிறந்தநாளுக்கு வர வேண்டும் என்பதாகக் கூறி வருகிறார்.அதற்கு ராதிகா வரதாகவும் கூறுகிறார்.தாத்தாவின் பிறந்த நாளுக்காக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.
எனவே, வீட்டிற்கு வந்த கோபியிடம் ராதிகா பாக்கியா வந்ததையும் பிறந்தநாளுக்காக அழைத்ததயைும் கோபியிடம் கூறுகிறார். இதனைக்கேட்ட கோபி ஷாக் ஆகினார். இதற்கு ராதிகா நீங்க கண்டிப்பாக டீச்சர் வீட்டுக்கு வந்தே ஆக வேண்டும் இல்லை என்றால் இனி வீட்டிற்கு வரக்கூடாது பேசக்கூடாது என்று கோபமிடுகிறார். கோபி பேசும் எதையும் காதில் வாங்காத படியும் தனது அறைக்கு செல்கிறாள் ராதிகா.
இந்நிலையில் கோபி புதுசா புதுசா வருதே சோதனை என்று புலம்புகிறார். “கோபிக்கே சோதனையா” என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். இதெல்லாம் கோபி எப்படி கடந்து வரப்போகிறாரா? இல்லை குடும்பத்திடம் கையும் களவுமாக போகிறாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்த படியே இனி வரும் எபிசோடுகளில் காணலாம்.
இதனைத் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி மெகா சங்கத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் கோபி வசமாக மாட்டிக் கொள்வாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.