வெள்ளித்திரைக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறதோ அதேபோல் சின்னத்திரைக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது வாரம்தோறும் சீரியல் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து வாரம் தோறும் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வமாக இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் சமீபத்தில் வெளிவந்துள்ளது அதில் முதல் ஐந்து இடத்தை பிடித்துள்ள சீரியல்களின் லிஸ்டை தற்போது பார்ப்போம். சின்னத்திரையில் விஜய் டிவி, சன் டிவி, கலர்ஸ் தமிழ்,ஜீ தமிழ், பாலிமர் போன்ற அனைத்து தமிழ் சேனல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இதை தொலைக்காட்சிகளில் விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டு தொலைக்காட்சிகளும் தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடங்களை பிடிக்கும். இந்த இரண்டு சேனல்களை மாற்ற சேனல்களை டிஆர்பி ரேட்டிங்கில் இடம்பெறாத வகையில் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சன் சன் டிவி சீரியலான கயல் சீரியல் டிஆர்பி-யில் டாப் லிஸ்டில் இருந்து வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் மற்றும் கதாநாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார்கள். சீரியல் அறிமுகமான சில காலகட்டத்திலேயே டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்தது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தினை விஜய்டிவி பாக்யலட்சுமி சீரியல் பிடித்துள்ளது. பிறகு மூன்றாவது இடத்தினை சன் டிவியின் வானத்தைப்போல சீரியலும், நான்காவது இடத்தினை விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலும், ஐந்தாவது இடத்தை சன் டிவியின் சுந்தரி சீரியலும் பிடித்துள்ளது.