தற்பொழுது உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். வாரந்தோறும் எந்த தொலைக்காட்சி டிஆர்பி-யில் முன்னணி வகிக்கிறது என்பதை தொடர்ந்து ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்பொழுது சின்னத்திரை ரசிகர்கள் எந்த சீரியல்களை அதிக அளவில் பார்த்துள்ளார்கள் என்பதை காண்பதற்காக இந்த வார டிஆர்பி ரேட்டிங் வெளிவந்துள்ளது. அந்த வகையில் இந்த வாரத்திற்கான விஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியளுக்கான டிஆர்பி ரேட்டிங் இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர் சீரியல்களின் மகாசங்கமதை முன்னிட்டு முதலிடத்தை பிடித்திருக்கிறது.அதன் பிறகு இந்த இரண்டு சிறிய முன் ஏற்கனவே தயாரிப்பில் இருந்து வரும் என்பது குறிப்பிடதக்கது இந்த இரண்டு சீரியல்களுக்கும் ரசிகர்கள் நிச்சயம் எப்பொழுது தங்களது ஆதரவை அளித்து வருகிறார்கள்.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பாரதிகண்ணம்மா சீரியல் இதய மாற்று அறுவை சிகிச்சையை வைத்து ஒளிபரப்பாகி வருவதால் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது எனவே டிஆர்பி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
பிறகு ராஜா ராணி 2 சீரியல் மூன்றாவது இடத்தினையும், தமிழும் சரஸ்வதியும் சீரியல் 4வது இடத்தையும் பிடித்துள்ளது. பிறகு ஈரமான ரோஜாவே 2 சீரியல் 5ஆவது இடத்தினையும், இதனைத் தொடர்ந்து தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு சீரியல்கள் அடுத்த இடத்தினை பெற்றுள்ளது.
பிறகு சன் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் முதலிடத்தையும், அண்ணன் தங்கை பாச போராட்டத்தினை அழகாக காண்பிக்கும் வானத்தைப்போல சீரியல் இரண்டாவது இடத்திலேயே பெற்றிருந்தது.பிறகு சுந்தரி சீரியல் 3ஆவது இடத்தினையும், ரோஜா சீரியல் 4வது இடத்தையும், ரொமான்டிக் சீரியஸான கண்ணான கண்ணே 5-ஆம் இடத்தையும் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து எதிர்நீச்சல், அபியும் நானும், சந்திரலேகா, பாண்டவர் இல்லம், சித்தி 2 போன்ற சீரியல்கள் அடுத்தடுத்த இடத்தினை பெற்றுள்ளது.