தற்பொழுது சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வரும் அனைத்து தொலைக்காட்சிகளும் டிஆர்பி-யில் முன்னனி வகிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் விஜய் டிவி, சன் டிவி இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கிடையே கடுமையான போட்டி நடந்து வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் சன் டிவியை தற்போது விஜய் டிவி ஓவர் டக் செய்து பல தங்களாக சன் டிவி சீரியல் தான் டிஆர்பி_யில் முன்னணி வகித்து வருகிறது. விஜய் டிவியின் சீரியல்களான பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட அனைத்து சீரியல்களையும் சன் டிவி சீரியல்கள் டிஆர்பி_யிலிருந்து தூக்கிவுள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வரும் நிலையில் கயல் சீரியல் அறிமுகமானதிலிருந்து தற்பொழுது வரையிலும் டிஆர்பி-யில் முதலிடத்தை பிடித்துள்ளது வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் டிஆர்பி-யில் பெரிதாக இடம்பெறாமல் இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
அதுவும் 0.13 புள்ளி வித்தியாசத்தில் மட்டுமே முதலிடத்தை இழந்துள்ளது பாக்கியலட்சுமி சீரியல். இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் தனது புருஷன் மிகவும் நல்லவன் என நினைத்து வந்த பாக்யாவிற்கு கோபி மற்றும் ராதிகாவின் உறவை பற்றி தெரியவந்துள்ளது எனவே வீட்டை விட்டு வெளியேறிய பாக்கியா தனது குடோனில் தங்கி வருகிறார்.
வீட்டில் இருப்பவர்கள் போய் அவரை அழைத்தாலும் வீட்டிற்கு மறுத்து வரும் நிலையில் அதிரடியான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது இதன் காரணமாகவே இந்த சீரியல் தற்பொழுது டிஆர்பி-யில் இரண்டாவது இடத்தினை பெற்றுள்ளது. மேலும் தற்பொழுது வெளியாகி உள்ள டிஆர்பி லிஸ்டில் டாப் 5 சன் டிவி சீரியல் அதிகமாக இருந்து வருகிறது.
1. கயல்
2. பாக்கியலட்சுமி
3.வானத்தைப்போல
4.ரோஜா
5.கண்ணான கண்ணே