சன் டிவியின் சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி.. அப்பனா எதிர்நீச்சல் சீரியலின் நிலமை

tamil-serial
tamil-serial

தமிழ் சின்னத்திரையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து நாடகங்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் மக்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களை ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொலைக்காட்சிகள் தான் சன் டிவி மற்றும் விஜய் டிவி இந்த இரண்டு தொலைக்காட்சிகளும் டிஆர்பியில் முதலிரண்டு இடங்களை பிடித்து வருகிறது.

அப்படி வாரந்தோறும் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் இணையதளத்தில் வெளியாகி வருவது வழக்கம் அதில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் 10வது இடத்தில் புதிதாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கும் ஆஹா கல்யாணம் பிடித்துள்ளது. இதனை அடுத்து 9வது இடத்தில் அண்ணன் தங்கையின் பாச உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சன் டிவியின் வானத்தைப் போல சீரியல் பிடித்துள்ளது.

அடுத்ததாக 8வது இடத்தினை கல்யாணம் என்ற பெயரில் மாற்றி மாற்றி திருமணம் செய்துக் கொண்டு ரசிகர்களை படாத பாடப்படுத்தி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலும், 7வது இடத்தில் கலெக்டராக வேண்டும் என்ற சுந்தரி சீரியலும், 6வது இடத்தில் சன் டிவியின் கயல் சீரியலும் இடம்பெற்றுள்ளது. இதனை அடுத்து முதல் ஐந்து இடத்தை பெற்று இருக்கும் சீரியல்களை பார்க்கலாம்.

5வது இடத்தில் ரவுடியாக இருந்த விக்ரமை மாற்றி மிகவும் நல்லவராக இனியா மாற்றி இருக்கும் நிலையில் இவ்வாறு இனியா சீரியல், 4வது இடத்தில் விஜய் டிவியில் பிடிக்காமல் திருமணம் செய்துக் கொண்டு எலியும் பூனையுமாக இருந்து வரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்பொழுது ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்று உள்ளது.

3வது இடத்தில் அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து வரும் நிலையில் தற்போது தனம் ப்ரஸ்ட் கேன்சர் இரண்டாவது ஸ்டேஜில் இருப்பதால் இறப்பதற்குள் தனது கடமைகளை செய்ய வேண்டும் என்பதற்காக பொறுப்பான அண்ணியாக இருந்த வருகிறார் அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இடம் பெற்றுள்ளது.

இதனை அடுத்து தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வந்த எதிர்நீச்சல் சீரியல் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு முதல் இடத்தில் தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியல் இடம்பெற்று இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் கோபியின் சிறந்த நடிப்பு, பாக்கியாவின் துணிச்சல் போன்றவை ரசிகர்களை கவர்ந்துள்ளது.