கேரளத்து பைங்கிளியாக மாறிய டிடி.! ஓணம் புடவையில் வைரலாகும் புகைப்படம்.!

சினிமா உலகில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் தமிழில்  ஜூலி கணபதி என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து நளதமயந்தி, விசில், சரோஜா, பவர் பாண்டி சர்வம் தாள மையம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது ரொமான்டிக், துருவ நட்சத்திரம் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் விரைவில் இந்த திரைப் படங்கள் திரைக்கு வருகின்றன.

இவர் சினிமாவில் அதிகமாக நடிக்கவில்லை என்றாலும் சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகள் தொகுப்பாளினி என பட்டையை கிளப்பி வருகிறார். பெரும்பாலும் டிவி தொகுப்பாளிநிகளுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் ஆரவாரம் காட்டுவார்கள் அந்தளவு கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

dd

இவர் முதன்முதலில் காபி வித் டிடி, அன்புடன் டிடி, ஜோடி நம்பர் 1 என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். சினிமா வாழ்க்கை சிறப்பாக இருந்தாலும் திருமண வாழ்க்கை மட்டும் இவருக்கு சரியாக அமையவில்லை. நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்றுக் கொண்டார். விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என அன்போடு அழைக்கப்படும் டிடி  சன் தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, ஜெயா எனபல்வேறு தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.

dd

திவ்யதர்ஷினி சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் இவர் அடிக்கடி ரசிகர்களை வெகுவாக கவருவதற்காக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பார். அந்த வகையில் தற்பொழுது ஓணம் பண்டிகையை முன்னிட்டு பல நடிகைகளும் கேரள புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

dd

அதேபோல் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி அவர்களும் கேரளா புடவையில் பால் கொழுக்கட்டை போல் பல பலனு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

dd

Leave a Comment

Exit mobile version