அழகான மாலத்தீவில் நடுக்கடலில் இருமுகன் பாடலுக்கு டிடி பண்ணும் அலப்பறை.! அதிக லைக்ஸ் குவிக்கும் வீடியோ..

தற்போதுள்ள சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகைகள் என அனைவருமே தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை இனிமையாக போக்குவதற்காகற்காக சுற்றுலாவிற்கு மாலத்தீவயே தேர்வு செய்கின்றனர்.

மாலத்தீவின் கடல் அழகை ரசிப்பது, யோகா செய்வது, சன் பாத் எடுப்பது, நீந்தியபடி உணவு உண்பது, கடலுக்குள்ளேயே தூங்குவது என வித்தியாசமான போட்டோ ஷூட்களை எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் விஜய் டிவியின் தொகுப்பாளினியான திவ்யதர்ஷினி சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அங்கிருந்தபடி அவர் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் பதிவிட்டு கொண்டிருந்தார்.

ddneelakandan
ddneelakandan

இந்த நிலையில் இவர் தற்பொழுது நயன்தாரா விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஹெலனா பாடலுக்கு விதவிதமான உடைகளை அணிந்து கடலின் அழகை ரசித்தபடி நயன்தாரா போல் விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ddneela

மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கடலின் அழகை விட நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.