திருமணத்தைப் பற்றி கேள்வி கேட்ட ரசிகருக்கு ஓப்பனாக பதில் கூறிய ரித்திகா.!

riththika
riththika

தனது ரீல் வீடியோவால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரித்திகா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலில்  கதாநாயகனின் தங்கையாக வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது முதல் சீனிலேயே பிரபலமடைந்தார்.

அதோடு குடும்பப்பாங்கான இவரது நடிப்பு ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமடைய ஆரம்பித்த இவர் குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவில் குடும்ப இளவரசிகள் வரையும் பிரபலமானார்.

பிறகு இன்னும் சில ரியாலிட்டி ஷோக்கலிளும் கலந்து கொண்டு வந்த இவர் தற்போது டிஆர்பி-யில் முன்னணி வகித்து வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் திருமணமான சில நாட்களிலேயே  இவருடைய கணவர் இறந்ததாகவும் தற்பொழுது இவருக்கு ஒரு பெண்குழந்தை மற்றும் தனது மாமனார் மாமியாருடன் வாழ்ந்து வருகிறார்.

பிறகு எழில் அமிர்தாவை காதலித்து வருகிறான் விரைவில் அமிர்தாவும் எழிலின் காதலுக்கு பச்சை கோடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ரித்திகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஒருவர் உங்களுக்கு திருமணம் எப்பொழுது என்று கேட்டதற்கு  எல்லாம் தலைவிதி என்று பதிலளித்துள்ளார். பிறகு தலை முடி அழகாக இருக்கிறது என்று ஒருவர் கூற அதற்கு உண்மையாவா என்று கூறிவிட்டு இது வெறும் விக் என்று கூறியுள்ளார் இவ்வாறு ரசிகர்களிடம் இவர் கலந்துரையாடிய அனைத்தும் வைரலாகி வருகிறது.