ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை தர்ஷா குப்தா. இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2வில் கலந்துகொண்ட பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இந்நிகழ்ச்சியில் பாதியிலேயே வெளியேறி இருந்தாலும் சிறப்பு விருந்தினராக அடிக்கடி வந்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்தினார்.
இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடும் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார்.
இப்படிப்பட்ட இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித் திரையிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ருத்ரத் தாண்டவம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டதாக சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருவதாக கூறி தர்ஷா குப்தா டப்பிங் செய்து கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார்.
அதோடு அந்த புகைப்படத்தில் இது தான் நான் ஹீரோயினாக நடிக்கும் என்னுடைய முதல் படம் எனவே நான் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்களும் இவருக்கு தொடர்ந்து வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறி வருகிறார்கள்.