ரிசப்ஷனுக்கு கிளம்ப சொன்ன பாட்டி.. எக்கேடாவது கெட்டுத்தொலை என மகாலட்சுமியை திட்டும் சூர்யா.! ஆஹா கல்யாணம் இன்றைய ப்ரோமோ வீடியோ

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகமாகி மக்களின் அமோக வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் ஆஹா கல்யாணம்.

இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகியின் அக்காவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் நிலையில் ஆனால் அந்த பெண் எனக்கு இவனை பிடிக்கவில்லை என கூறி ஓடி விடுகிறார். எனவே வேறு வழி இல்லாமல் அந்தப் பெண்ணின் தங்கை கதாநாயகி கதாநாயகனை திருமணம் செய்து கொள்கிறார் ஆனால் இவர்களுக்குள் ஒத்துப் போகாமல் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது.

எனவே இவர்கள் எப்படி ஒன்றிணைவார்கள் என்பது வைத்து கதை களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. கதாநாயகியான மகாலட்சுமி மிகவும் பொறுப்பாக வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளையும் செய்து வரும் நிலையில் சூர்யாவின் பாட்டி மற்றும் மற்ற வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

அப்படி மகாலட்சுமி போட்டிருந்த கோலம் அனைவரையும் கவர்ந்த நிலையில் தனது அம்மாவும் மாறிவிடுவாரோ என்ற பயத்தில் சூர்யா வேண்டுமென்றே கோலத்தை அலைத்து விடுகிறார். இதனை மகாலட்சுமியும் பார்த்துவிட அவருக்கு மிகவும் கோபம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏட்டிக்கு போட்டியாக இருவரும் எது செய்தாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சூர்யாவின் பாட்டி மகாலட்சுமியிடம் நகைகளை போட்டுக்கொண்டு தயாராக வேண்டும் என சொல்கிறார் ஆனால் மகாலட்சுமி முடியாது எனக் கூறிவரும் நிலையில் அவர் என்னை ஏற்றுக் கொள்ளவே இல்லை நான் ஏன் ரெடியாக வேண்டும் என கேட்கிறார்.

இதனை பார்த்த சூர்யா பாட்டி நீங்க போங்க நான் பாத்துக்குறேன் என சொல்ல பாட்டி வெளியில் சென்று விடுகிறார் பிறகு மகாலட்சுமியிடம் சூர்யா நகைகளை போட்டுக் கொள்ளுமாறு கூற என்னால் முடியாது என்ன கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க என கத்த அதற்கு சூர்யா இப்ப நான் என்ன செய்ய வேண்டும் என கேட்கிறார் வெளியில் போங்க என சொல்ல அதற்கு எப்படியோ கெட்டுப் போ என சொல்கிறார் கடுப்பான சூர்யா கையில் இருந்த நகையை தூக்கிப் போட மகாலட்சுமியின் கழுத்தில் விழுந்து விடுகிறது இதனை நினைத்து மகாலட்சுமி கண்கலங்க பாட்டி மகிழ்ச்சி அடைகிறார். இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது..