தென்னிந்திய சினிமா உலகில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகை திரிஷா இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ராங்கி பொன்னியின் செல்வன் 1, இரண்டாவது பாகம் போன்ற படங்கள் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக ஒரு வெற்றி படத்தை கொடுக்க தளபதி விஜய் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படம் மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் பேக் திரைப்படமாக இருந்தாலும் இந்த படத்திலும் திரிஷாவுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை திரிஷா சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் உடன் நடித்தது குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். படத்தில் நடிக்கும் போது நடிகைகளுக்கு கிளாமர் வெவ்வேறாக இருக்கும்.
எல்லோருக்கும் வித்தியாசம் இருக்கும் கிளாமர் என்பது கவர்ச்சியோ, செக்ஸியோ மட்டும் கிடையாது. நான் கிளாமரில் நடிக்க யோசித்துல்லாம் செய்ய மாட்டேன். அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தா கிளாமராக நடிப்பேன் இல்லை என்றால் சில நேரங்களில் எனக்கு அது சங்கடமாக அமைந்து விடும் எனக்கு அந்த கிளாமர் நடிப்பு பிடிக்கவில்லை என்றால் அது அப்படியே திரையில் தெரியும்..
கில்லி படத்தில் அந்த கலங்கரை விளக்கத்தில் நடிப்பது பற்றி தொகுப்பாளர் கேட்க அதற்கு திரிஷா கூறியது அந்த சீன் இரவு 2 மணிக்கு எடுக்கப்பட்டது எனக்கும், விஜய்க்கும் நல்ல தூக்கம் வந்தது. ரெண்டு பேரும் நல்லா தூங்கி மூஞ்சா இருந்தது. இயக்குனர் வந்து எங்களிடம் இது ரொமான்ஸ் சீன் இரண்டு பேரும் தூங்குகிறீர்கள் என்று வந்து சொன்னாரு
அந்த சீனுக்காக 15 நேரமா ஷூட் பண்ணிட்டு இருந்தாங்க எங்களுக்கு ரொம்ப கலைப் ஆகிவிட்டது திரையில் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும் ஆனால் நமக்கு தெரியும் அந்த நேரத்தில் எப்படி இருந்தோம்ன்னு ரொமான்ஸ் எல்லாம் ரொம்ப கஷ்டம் ஆனா அதை செய்து தான் ஆக வேண்டும்.