தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக ஓடிக்கொண்டிருப்பவர் ஏ.ஆர். முருகதாஸ் இவர் முதலில் அஜித்தை வைத்து தீனா என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் முதல் படமே பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை பல்வேறு டாப் நடிகர்களுடன் கைகோர்த்தார் அந்த வகையில் சூர்யாவுடன் கஜினி, ஏழாம் அறிவு. விஜயகாந்துடன் ரமணா.
விஜய் உடன் துப்பாக்கி, கத்தி, சர்க்கார் என அடுத்தடுத்த மாபெரும் வெற்றி படங்களை கொடுத்து தன்னை பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார் தொடர்ந்து திரை உலகில் இயக்குனராகச் ஜொலித்த இவர் தற்பொழுது தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார். கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி உள்ள 1947 என்னும் திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு கதையை சொல்லி இருக்கிறார். வெகுவிரைவில் இந்த கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ ஆர் முருகதாஸ் நடிகர் விஜய் பற்றி பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்..
விஜய் படத்திற்காக நான் ஒரு வருடம் கடினமாக உழைத்தேன் ஆனால் அந்த படம் எனக்கு கிடைக்கவில்லை என கூறி உள்ளார். ஏ ஆர் முருகதாஸ், விஜய் உடன் கைகோர்த்த அனைத்து படங்களுமே வெற்றி படங்கள் தான் அந்த வரிசையில் விஜயுடன் நான்காவது முறையாக இணைய ஆசைப்பட்டார் ஆனால் சில காரணங்களால் அது அமையவில்லை..
பிறகு ஏ. ஆர். முருகதாஸ் தமிழில் தலை காட்டவும் முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்.. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்பொழுது தான் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை எடுக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வமான தகவல்களும் வெளிவர இருக்கிறது.