உன் மேல நம்பிக்கை இல்ல.. காஷ்மீர் ஷூட்டிங்கில் சத்தியம் வாங்கிய விஜய் – மனம் திறந்த லோகேஷ் கனகராஜ்

Leo
Leo

Leo : ஜெயிலர், ஜவான் படத்தை தொடர்ந்து விஜயின் லியோ படத்தை ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பெரிதும் எதிர்நோக்கி காத்திருகின்றன்ர்.  லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைத்துள்ளார் அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன்..

ப்ரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.  படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. வெளிவர இன்னும் சில தினங்களே இருப்பதால் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக போய்க்கொண்டிருக்கிறது. லோகேஷ், ரத்ன குமார் பேட்டி கொடுத்து வருகிறார் மறுபக்கம் ஆங்காங்கே பேனர் மற்றும் பெரிய இடங்களில்யோ விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் லியோ டிக்கெட் புக்கிங் ஓபன்னாகி உள்ளதால் பலரும் போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர் முன்பதிவில் மட்டுமே பல கோடி அள்ளி உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் லியோ மற்றும் விஜய் குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்..

காஷ்மீரில் 50 நாள் சூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்தோம் அங்கு பகலை விட இரவில் குளிர் அதிகம் ஆனால் படத்தின் பல காட்சிகள் இரவு நேரத்தில் படம்பிடிக்க வேண்டியதாக இருந்தது இதனால் 20 நாட்கள் நைட் ஷூட் போக வேண்டும் என விஜய் இடம் கேட்டு இருக்கிறார்.

லோகேஷ் 20 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் இழுத்துகிட்டு போகாதென்ன சத்தியம் பண்ணு என விளையாட்டாய் கேட்டாராம் விஜய் ஆனால் லோகேஷ் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டு 20 நாட்களிலேயே சொன்னபடி சூட்டிங் எடுத்து முடித்தாராம் இந்த ஷூட்டிங் முடிக்க ராணுவத்தினரின் உதவி மற்றும் அந்த ஊர் கிராமங்களில் உதவி பெரிதாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.