தனது தாயை சைக்கிளில் ஆசையாக உட்கார வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய்.! ஷோபா பகிர்ந்த புகைப்படம்..

Actor Vijay: நடிகர் விஜய் தனது அம்மாவை ஆசையாக சைக்கிளில் வைத்துக் கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் பெற்றது.

விமர்சனம் ரீதியாக கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனை அடுத்து தற்பொழுது தளபதி விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித்குமார் தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தனது 68வது படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்க இருக்கிறது அதன்படி 2024ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறு வயதில் நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சில மாதங்களுக்கு ஷோபாவை இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதாவது, இதுவரையிலும் யாரும்  பார்த்திடாத புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. சிறுவயதில் விஜய் தாய் ஷோபாவை சைக்கிளில் உட்கார வைத்துக்கொண்டு புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படத்தை ஷோபா தற்போது  சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது. நடிகர் விஜய் சமீப காலங்களாக தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு பல நல உதவிகளை செய்து வரும் நிலையில் விரைவில் அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay
vijay

Leave a Comment