அட்லீக்காக அமெரிக்காவில் சிறப்பான சம்பவம் செய்ய இருக்கும் தளபதி விஜய்.! தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்து வைக்கல..

atlee kumar
atlee kumar

Actor Vijay: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் விஜய் தனது 68வது படத்திற்காக வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்து உள்ளார்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்திற்காக விஜய் அமெரிக்கா சென்றிருக்கும் நிலையில் அடிக்கடி ஃபேன் பாயாக மாறி சப்ரைஸ் கொடுத்து வருகிறார். Equalizer 3 FDFS பார்த்த விஜய் இதனை அடுத்து ஷாருக்கானின் ஜவான் படத்தினையும் அமெரிக்காவில் பார்த்துவிட்டு சென்னை திரும்ப முடிவெடுத்துள்ளாராம்.

லியோ படம் வெளியாவதற்கு முன்பே தளபதி 68 படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கம் மிகவும் பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.

எனவே இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் விஜய்க்கு மாசான லுக் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ஸ்டைல் சர்ப்ரைஸாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே இதற்காக அமெரிக்காவின் லால் ஏஞ்சல்ஸ்க்கு விஜயை கூட்டி சென்றுள்ளார். வெங்கட் பிரபு இவர்களுடன் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதியும் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள University of Southern California – Institute for Creative Technology-ல் விஜய்க்கு மேக்கப் பாடி ஸ்கேனிங் செய்யப்பட்டுள்ளதா அதன்படியே தளபதி 68 பாடத்திற்காக அவருடைய கேட்டப் அமையும் என கூறப்படுகிறது. சமீபத்தில் தளபதி விஜய் ஹாலிவுட் படமான Equalizer 3 FDFS பார்த்த விஜய் இதனை அடுத்து ஷாருக்கானின் ஜவான் படத்திலிருந்து.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜவான் படம் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. விஜயின் மூன்று திரைப்படங்களை இயக்கிய அட்லி அவருடைய செல்ல தம்பியாக இருந்து வருகிறார். ‌‌

சென்னை வந்தால் கண்டிப்பாக ரசிகர்களுடன் ஜவான் படத்தினை பார்க்க முடியாது என்பதற்காக விஜய் அமெரிக்காவிலேயே ஜவான் படத்தினை பார்த்து விடலாம் முடிவெடுத்துள்ளாராம்.