அந்த கதாபாத்திரத்தில் முடிஞ்சா விஜய்யை நடிக்க சொல்லுங்க.. இயக்குனரிடம் கோவப்பட்ட அஜித்..! எந்த படத்தில் தெரியுமா.?

ajith-and-vijay-
ajith-and-vijay-

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் நடிகர் அஜித்குமார் சினிமா உலகில் ஆரம்பத்தில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பலவற்றில் துணிந்து நடித்தார்.  அப்படி இவர் 1999 ஆம் ஆண்டு ராஜகுமாரன் இயக்கிய நீ வருவாய் என படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தினார்.

அவருடன் கைகோர்த்து பார்த்திபன், தேவயானி, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர் படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இப்படி இருகின்ற நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ராஜகுமாரன் கலந்து கொண்டார். அப்பொழுது இந்த படம் குறித்து பேசி உள்ளார் முதலில் நடிகர் அஜித் ஓகே சொன்ன உடன்..

பார்த்திபன் கேரக்டரில் நடிக்க விஜய்யுடன் பேச்சு வார்த்தையை நடத்தினேன் ஆனால் அவரோ 15 நாட்கள் தருகிறேன். பிளாஷ்பேக் காட்சியில் வேண்டுமானால் நடிக்கிறேன் ஹீரோவாக அஜித்தை நடிக்க சொல்லுங்கள் என சொன்னார் நடிகர் அஜித்தோ என்னால் முடியவில்லை என்றார்..

காரணம் படம் முழுக்க ஹீரோவை ஹீரோயின் காதல் இல்லை என சொல்லியே வேண்டாம் வேண்டாம் என சொல்லுவாரு இப்படி இருந்ததால் ஹீரோயிசம் இருக்காது இப்படி தான் நடிகர் மோகன் படம் ஒன்றில் நடித்து மார்கெட் குறைந்தது அதனால் என்னால் முடியாது தைரியம் இருந்தால் விஜய் பண்ண சொல்லுங்கள் என அஜித் சொல்லிவிட்டார்.

மேலும் நான் இந்த கதையை இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக சேர்வதற்கு முன்பே கதை எழுதி வைத்துவிட்டேன் அதன் பிறகு கதை யாருக்கு சொல்லலாம் என்று முடிவு பண்ணினேன். நடிகர் விஜய்க்காக எழுதின கதை தான் இது நடிகர் பார்த்திபனுக்காக சில விஷயங்கள் மாற்றம் செய்தேன் என ராஜகுமாரன் தெரிவித்தார். இந்த செய்தியை தற்போது இணையதளப் பக்கத்தில் பகிரப்பட்டு வருகிறது.