vijay : தளபதி விஜய் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்து உள்ளார். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த வாரிசு படம் வெற்றி படமாக மாறியதை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து லியோ திரைப்படத்திலும் விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார்.
படத்தின் ஒவ்வொரு சீனும் செம்ம மாஸ் ஆக வந்திருப்பதாக படத்தில் நடித்தவர்கள் பலரும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர் இதனால் லியோ படத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது கடைசியாக வெளிவந்த நான் ரெடி பாடல் கூட ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகியது இப்படி லியோ படம் பற்றி ஒரு பக்கம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்க..
மறுப்பக்கம் விஜய் அரசியலில் இறங்குவதற்கான வேலைகளை முன்புறமாக பார்த்து வருகிறார். தொடர்ந்து தனது மக்களின் இயக்கத்தில் பொறுப்பில் உள்ள பலரையும் சந்தித்து பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் இதன் மூலம் விஜயின் மதிப்பு நான்கு உயர்கிறது.
அண்மையில் கூட தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்து பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது இப்படி போய்க்கொண்டிருக்கும் விஜய் எப்பொழுது அரசியல் கட்சி தொடங்குவார் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் அதற்கும் தற்பொழுது விடை கிடைத்துள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் தன்னுடைய அரசியல் கட்சியை தூங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது அதற்கான அறிவிப்பு மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் சொல்லப்படுகிறது. விஷயத்தை கேட்ட தளபதி ரசிகர்கள் செம குஷியில் இருந்து வருகின்றனர்.