இளம் இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் திலீப்குமார் ஆரம்பத்தில் சின்ன திரையில் ஒரு சில நிகழ்ச்சிகளை கொடுத்து அதன் பிறகு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வரும் நடிகர் நடிகைகளுக்கு கதை கூறி எடுத்தவுடனேயே டாப் நட்சத்திர பட்டாளங்கள் உடன் கைகோர்த்து படங்களை இயக்கி வருகிறார்.
இவர் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சிறந்து விளங்கியது. மேலும் சிவகார்த்திகேயன் கேரியரில் டாக்டர் படம் மறக்க முடியாத ஒரு படமாக விளங்கியது.
இந்த ஹிட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய்க்கு கதை கூறி பீஸ்ட் என்ற திரைப்படத்தை அண்மையில் கொடுத்துள்ளார். பீஸ்ட் படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று வருகின்றனர்.
மேலும் வழக்கமான நெல்சன் பாணியில் இந்த படம் அமையவில்லை என பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த படம் வெளிவந்த ஒரு சில நாட்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தினாலும் நாட்கள் செல்லச் செல்ல வசூல் மிக மோசமாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் நடிகர் விஜய் பீஸ்ட் படம் குறித்து வரும் விமர்சனங்களை கருத்தில் கொள்ளாமல் பீஸ்ட் படக்குழுவிற்கு விருந்து அளித்துள்ளார். அந்த விருந்தில் விஜயுடன் சேர்ந்து நெல்சன் திலீப்குமார், பூஜா ஹெக்டே, VVD கணேஷ், அனிருத், சதிஷ் போன்ற பலரும் இணைந்து உள்ளனர். மேலும் இயக்குனர் நெல்சன் பீஸ்ட் படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவித்துள்ளார்.