தமிழ் சினிமா உலகில் பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் கே எஸ் ரவிகுமார் இவர் தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் இவர் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
கே எஸ் ரவிகுமார் அவர்கள் ஒரு ஹீரோவை வைத்து தான் படத்தின் கதையை எழுதுவார் அப்படி இவர் மனதில் வைத்து எழுதி வெளிவந்த பல படங்கள் மாபெரும் ஹிட்டடித்த தோடு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது அப்படி இவர் இயக்கி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம்தான் நாட்டாமை திரைப்படம் 1994ஆம் ஆண்டு வெளிவந்தது.
இப்படத்தின் வெற்றியை தமிழ் சினிமாவை ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் அதிர வைத்தது அந்த அளவிற்கு இது வசூல் வேட்டை நடத்தியது இப்படத்தில் சரத்குமார், குஷ்பு ,மீனா, சங்கவி , ரவிந்தர் ராஜா ,கவுண்டமணி ,செந்தில், விஜயகுமார் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தை ஆர்பி சவுத்ரி அவர்கள் தயாரித்து இருந்தார்.
இப்படத்தில் சரத்குமாருக்கு தம்பியாக ரவீந்தர் ராஜா நடித்திருந்தார் இப்படத்தின் மூலம் அவர் மேலும் தமிழ் சினிமாவில் பிரபல மடைந்து மட்டுமல்லாமல் அடுத்ததாக வாய்ப்பினை கைப்பற்றினார்.ஆனால் கேஎஸ் ரவிக்குமார் அவர்களோ சரத்குமாருக்கு தம்பி கேரக்டரில் விஜய் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார் ஆனால் இந்தப் படத்தில் நடிகை சங்கீதா நடிக்க இருந்தார்.
நடிகர் விஜய் அப்செட் ஆனார் சங்கீதா உடன் இணைந்து ஏற்கனவே பல படங்களில் நடித்த போது கிசுகிசுக்கள் ஏற்பட்டதால் இப்படத்தை வேண்டாமென தவிர்த்ததாக கூறப்படுகிறது. நாட்டாமை திரைப்படத்தில் அவர் நடித்திருந்தால் அவரது மார்க்கெட் மேலும் உயர்ந்து இருக்கும் என ஒருபக்கம் கூறப்படுகிறது.