சினிமா உலகில் ஒரு படம் தோல்வியை சந்திக்கிறது என்றால் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் சரியாக நடிக்கவில்லை அல்லது படத்தின் கதை சரியாக இல்லை இந்த இரண்டு காரணங்களால் தான் படம் தோல்வியை சந்திக்கும். ஆனால் ரசிகர்கள் அதை மறந்துவிட்டு ஒரு சில ஹீரோ அல்லது நடிகர் நடிகைகள் இணைந்ததால் தான் ராசியில்லாமல் அந்த படம் தோல்வியை தருவதாக கூறி விமர்சிக்கின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து அசத்தி வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படமும் கலவையான விமர்சனத்தை பெற்று ஓரளவு சுமாரான வசூலை அள்ளியது. இந்த படத்தில் பல லாஜிக் மீறல் காமெடி போன்றவை சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை அதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய ஒரு தோல்வியாகவே பார்க்கப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்கள் பலரும் இந்த படம் தோல்வியை தழுவ முக்கிய காரணம் ஒரு சில நடிகர்கள் என குறிப்பிட்டுள்ளார் குறிப்பாக யோகி பாபு விஜய்யுடன் நடித்த படங்கள் அனைத்துமே தோல்விப் படங்களாக அமைந்து உள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .
யோகி பாபு விஜய் உடன் கைகோர்த்து சர்க்கார், பிகில், பீஸ்ட் போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார் இந்த மூன்று படங்களுமே தோல்வி படங்கள் என ரசிகர்கள் கூறி உள்ளனர்.இதற்கு பதிலளித்த யோகி பாபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் தேங்க்யூ பா என தங்கிலீஷ் ஸ்டைலில் கூறியுள்ளார்.
உண்மையில் யோகி பாபு விஜய் உடன் கை கோர்த்து பணியாற்றிய திரைப்படங்களில் சர்க்கார் பீஸ்ட் ஆகிய படங்கள்தான் தோல்வி படம் பிகில் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து வசூல் வேட்டை நடத்திய திரைப்படம். யோகி பாபு அடுத்ததாக தளபதி விஜயுடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து தளபதி 66வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.