சூப்பர் ஹீரோ கதையில் நடிகர் விஜய்.? இயக்குனர் யார் தெரியுமா தளபதி 65 எதிர்பார்ப்பை எகிரவைக்கும் தகவல்.!

super-hero-vijay
super-hero-vijay

இளைய தளபதி விஜய் நடித்து வரும் எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் சென்ற வருடம் இவர் நடித்திருந்த பிகில் என்ற திரைப்படம் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தது மட்டுமல்லாமல் வசூல் வேட்டையிலும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

இதனையடுத்து விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் படத்தின் டீசர் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது வெளிவந்த நாளில் இருந்தே தற்போது வரை சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த படம் அடுத்த வருடம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படுவதாக சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

இதையடுத்து விஜயிடம் பிரபல இயக்குனர் ஒருவர் அருமையான கதையை கூறி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ranjith
ranjith

அந்த இயக்குனர் யார் என்றால் வேறு யாரும் இல்லை இயக்குனர் ரஞ்சித் தளபதி விஜய் சந்தித்து சூப்பர் ஹீரோ என்ற கதையை கூறியுள்ளார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

விஜய் மற்றும்  ரஞ்சித் கூட்டணியில் இந்த படம் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களது கூட்டணியில் இருந்து வேற ஏதாவது ஒரு தகவல் கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.