விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது மேலும் தற்பொழுது தமிழ் தொலைக்காட்சியில் விஜய் டிவி சார்பில் இருந்து வருகிறது. அந்த வகையில் மக்களின் மனதில் அதிக அளவு கவர்ந்த தொலைக்காட்சியாக விஜய் டிவி இருந்து வரும் நிலையில் தற்போது இந்த வாரம் டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.
அதாவது தொடர்ந்து சன் டிவி சீரியல்கள் டிஆர்பியில் முன்னணியில் இருந்து வரும் நிலையில் விஜய் டிவியின் பெரும்பாலான சீரியல்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற சீரியல்கள் கடைசி இடத்தை பிடித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக விஜய் டிவி டிஆர்பியில் பெரிதும் அடி வாங்கி வரும் நிலையில் சில சீரியல்களை முடித்துவிட்டு புதிய செய்திகளை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவ்வாறு சமீப காலங்களாக போய்க்கொண்டிருந்த நிலையில் தற்போது சில வாரங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் முதல் ஐந்து இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியல் டிஆர்பியில் 9.46 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதனை தொடர்ந்து பாரதி கண்ணம்மா சீரியல் 8.14 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தினையும், பாண்டியன் ஸ்டோர் சீரியல் 7.92 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தினையும், 5.68 புள்ளிகளுடன் ஈரமான ரோஜாவே 2 சீரியல் நான்காவது இடத்தினையும், தமிழும் சரஸ்வதியும் சீரியல் 5.48 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தினையும், கமல் சார் தொகுத்து வழங்கிய வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 5.01 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தினையும் பிடித்துள்ளது.
பின்னுக்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியல் சமீப காலங்களாக கிளைமாக்ஸ் காட்சிகளுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பெரிய மாற்றம் நடந்துள்ளது. இவ்வாறு விரைவில் விஜய் டிவி நல்ல கதையம்சம் உள்ள சீரியல்களை ஒளிபரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு விஜய் டிவியின் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு அளவிற்கு சீரியலுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.