விஜய் டிவியில் ட்ரைன் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலுக்கு அறிமுகமான காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வந்தது ஆனால் இந்த சீரியல் தொடர்ந்து ஒரே கதையை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் இந்த சீரியல் எப்பொழுது முடிப்பீர்கள் என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள்.
காதல் கதையாக துவங்கிய இந்த சீரியல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வெவ்வேறுப்பினை ஏற்படுத்தி உள்ளது இப்படிப்பட்ட நிலையில் சில வாரங்களாக கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் தற்பொழுது டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை வைத்து ஓட்டி வருகிறது. அதாவது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் மொத்த பிரச்சனையும் சரியாகிவிடும் என்று இருந்து வந்த நிலையில் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்காமல் சீரியலை இழுத்து வந்தார்கள்.
இதனால் நாளுக்கு நாள் ரசிகர்கள் இந்த சீரியலால் கடுப்பானவர்கள் தற்பொழுது கண்ணம்மா ஹேமா தன்னுடைய மகள் தான் என்ற உண்மையை உடைத்து தன்னுடன் அழைத்து வந்த நிலையில் அடுத்தது டிஎன்ஏ டெஸ்ட் வந்து பாரதிக்கு உண்மைகள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த வாரமும் இது நடக்க போகவில்லை என்பது ப்ரோமோ வீடியோவின் மூலம் தெரிய வந்துள்ளது.
கிளைமாக்ஸ் நோக்கி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் கதையை இழுக்க வேண்டும் என்பதற்காக தீபாவளியை மீண்டும் இந்த சீரியல் குழுவினர்கள் கொண்டாட உள்ளார்கள் இதற்காக எல்லோரும் கண்ணம்மாவின் வீட்டிற்கு வர பாரதி மற்றும் வீட்டில் தனியாக இருக்க சௌந்தர்யா பாரதி பற்றி சொல்லி வருத்தப்படுகிறார்.
பிறகு ஹேமா வீட்டிற்கு சென்று பாரதியுடன் தீபாவளி கொண்டாடுகிறார் இந்த ப்ரோமோ தான் தற்பொழுது வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவர்கள் பாரதிக்கு போன் செய்து தற்பொழுது டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வராது என்றும் பல பிரச்சனைகள் இருப்பதாகவும் கூறுகிறார்.