இளையதளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் இன்று ஆயிரம் திரையரங்குகளில் குறையாமல் தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது வெளிவந்த நாளிலேயே ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் மாஸ்டர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் வெளியான பொழுது ரஜினியின் 2.o பட சாதனையை ஓரம் கட்டியதாக சமிபத்தில் ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களிடையே மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்தோம்.
மேலும் மாஸ்டர் திரைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும் விஜய்க்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியது மட்டுமல்லாமல் தல அஜித் ரசிகர்களையும் குஷிப்படுத்தும் வகையில் ஒரு வசனம் கூறியுள்ளாராம்.
அந்த வசனம் என்னவென்றால் விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் தல அஜித் நடித்த காதல் கோட்டை படத்தின் கதையை மாளவிக மோகனிடம் கூறுவாராம் அதற்கு தளபதி ரசிகர்கள் திரை அரங்கம் அதிரும் படியாக கரகோஷம் எழுப்பினார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் மிக வேகமாக வைரலாகி வருகிறது.