தளபதி விஜய் தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார் இவர் இதுவரை நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான் இப்பொழுது கூட தனது 66-வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஹார்பர் பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். விஜயின் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என பட குழு திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய்.
லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் வெற்றியை ருசித்து ஓடிக் கொண்டிருந்த இவர் நிஜ வாழ்க்கையிலும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறார். 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
ஆனால் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக நடிகர் விஜய் வேறு ஒருவரை காதலித்ததாக சொல்லப்படுகிறது அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல நடிகை சங்கவி என கிசுகிசுப்படுகிறது. இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்தனர் அப்பொழுது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும் ஆனால் இந்த காதல் விஜயின் தந்தைக்கு தெரிந்தது அவருக்கு இது சுத்தமாக பிடிக்காமல் போனதாம் சொல்லப்படுக்கிறது.
மேலும் விஜய் மற்றும் சங்கவியின் காதல் பற்றி அப்போதைய பத்திரிகைகள் பெரிதாக கிசுகிசுத்தனர். இதிலிருந்து வெளிவர விஜயை மீட்க விஜயின் தந்தை இனி சங்கவியுடன் நடிக்க கூடாது என முடிவெடுத்து விஜயை சரியான பாதையில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.