தமிழ் சினிமா உலகில் வருடத்திற்கு நூறு படங்கள் கிட்டத்தட்ட ரிலீஸ் ஆகின்றன. அதில் பெரும்பாலான படங்கள் வெற்றியை ருசிக்கின்றன. ஒரு சில படம் மக்களுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டால் அந்த படத்தை பல வருடம் கழித்தும் அந்த படத்தை பற்றி பேசுவம், மீண்டும் பார்ப்பதுமாக இருந்து வருகின்றனர் அந்த வகையில் சில வருடம் முன்பு வெளியான செவன் ஜி ரெயின்போ காலனி திரைப்படம்.
இப்பொழுதும் பலருக்கும் பிடித்தமான படமாக இருக்கிறது காரணம் அந்த படத்தில் ஆக்ஷன், சென்டிமென்ட், காதல், பாடல் என அனைத்தும் அற்புதமாக இருக்கும் அதனால் இப்பொழுது கூட இந்த படத்தை பற்றி பேசுவது வழக்கம். செவன் ஜிரெயின்போ காலனி படத்தை மிக சூப்பராக எடுத்து இருப்பார் இயக்குனர் செல்வராகவன். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருப்பார் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் போன்ற பலர் நடித்திருந்தனர்.
படம் அப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் பாடல்கள் அனைத்துமே நல்லதொரு வரவேற்பைப் பெற்றது இந்த படத்திற்கு நா முத்துக்குமார் பாடல்கள் எழுதியிருந்தார். இந்த படம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார் சோனியாஅகர்வால் அண்மையில் பேட்டி ஒன்றில் அவர் சொன்னது :
செவன் ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே விஜயுடன் இணைந்து மதுர என்னும் திரைப்படத்தில் நடித்து வந்தேன். இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாட்டில் நடைபெற்று வந்தது அப்போது செவன் ஜி ரெயின்போ காலனி படத்தின் பாடல்கள் வெளியாகி இருந்த சமயம். மதுர படத்தின் சூட்டிங் வெளிநாட்டில் நடைபெற இருந்தது. செவன் ஜி ரெயின்போ காலனி படத்திலிருந்து பாடல்கள் வெளியாகியது.
விஜய் ஷூட்டிங்கில் சிறு இடைவெளி கிடைக்கும் போது காருக்குள் ஓடிச்சென்று பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தார் நாங்கள் வேற ஏதோ என்று நினைத்துக் கொண்டிருந்தோம். கடைசியில் பார்த்தால் செவன் ஜி ரெயின்போ காலனி படத்திலிருந்து அந்த பாடல் வெளிவந்து ஓடிக் கொண்டிருந்தது.
அங்கிருந்த அனைவரும் ஷாக்காகி தன்னுடைய பாடலுக்கு நடனம் ஆடாமல் செவன் ஜி ரெயின்போ காலனி வந்த அந்த பாடலை கேட்டுக்கொண்டிருந்தார். பாடல்கள் அவ்வளவு அற்புதமாக இருந்ததாம் அந்த பாடலை எழுதியது நா முத்துக்குமார் யுவன் சங்கர் ராஜா இசையைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.