உங்களுக்கு வந்தா மட்டும் ரத்தம் பொதுமக்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.? விஜயை பார்த்து முக்கிய பிரபலம் அதிரடி.!

beast-nelson
beast-nelson

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் இவர் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது அதாவது ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த ட்ரெய்லரில் அரசியல் சார்ந்த குறியீடுகள் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்தார்கள் இந்த நிலையில் தளபதி விஜய் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார் அதில் அரசியல்வாதிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மீம்ஸ் மற்றும் பதிவுகள் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதைப்பார்த்த பால் முகவர் சங்க நிர்வாகி பொன்னுசாமி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளை சமூக வலைத்தளத்தில் போஸ்டர் மூலமாகவோ பொதுவெளிகளில் அவமானப்படுத்தினால் விஜய் மக்கள் இயக்கத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள விஜய் தன்னுடைய படம் வெளியானால் கட்டவுட் வைத்து அதன் மேலே ஏறி அதற்கு மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்கிறேன் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வீன் வேலைகளில் ஈடுபட கூடாது எனவும் தங்களின் உயிரை துச்சமாக எண்ணி அவ்வாறு செயல்படால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி தன்னுடைய ரசிகர்களை நல்வழிப்படுத்த ஏன் முன்வர வில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அரசியல்வாதிகளுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் வந்தால் மட்டும் ரத்தம் ரசிகர்களுக்கும் பொதுமக்கள் என்றால் அது தக்காளி சட்னியா என விஜய்யை பார்த்து கேட்டுள்ளார்.

இவர் இவ்வாறு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதற்கு பல ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஒரு சில ரசிகர்கள் அவர் கேட்கும் கேள்விகள் ஞாயம் தான் என கருத்து தெரிவித்துள்ளார்கள்.