வாரிசை முடிச்சிட்டு தளபதி 67 யை ஆரம்பித்த விஜய்.! வைரலாகும் புகைப்படம்

vijay 12
vijay 12

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் நிலையில் தற்போது வம்சி இயக்கத்தில் தில்ராஜ் தயாரிப்பில் விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த திரைப்படத்திற்கான பணிகளை இயக்குனர் வம்சி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கம் அடுத்த திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். லோகேஷ் கனகராஜ்யிடம் மேலும் சில பேட்டிகளில் தயாரிப்பு நிறுவனம் கூறும் வரை பொறுமையாக இருக்க வேண்டும் என கூறினாரே தவிர வேறு எதுவும் இதனை பற்றி கூறவில்லை.மேலும் இந்த திரைப்படத்தினை பற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பை இதுவரையிலும் பெரிதாக வெளிவரவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் சமீப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் பொழுது அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் தன்னுடைய அடுத்த படம் கேங்ஸ்டர் பணமாக இருக்கும் வேண்டும் என தெரிவித்தார். இப்படிப்பட்ட நிலையில் தளபதி 67 திரைப்படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

நடிகர் விஜய் தற்பொழுது வம்சி  இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் ஷூட்டிங்கில் மிகவும் பிஸியாக நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மாதவன் நடித்துள்ளார்.மேலும் சரத்குமார் மற்றும் பிரகாஷ்ராஜ்,பிரபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது அதில் ஹாஸ்பாரியில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மருத்துவமனை ஒன்றில் எடுக்கப்பட்ட காட்சிகளும் ரிலீசான நிலையில் வாரிசு பட குழுவினர்கள் பெரிதும் அதிர்ச்சடைந்தார்கள் இதன் காரணமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

vijay 67
vijay 67

தற்பொழுது இறுதிக்கட்ட பணப்பிடிப்புகள் நடைபெற்ற வரும் நிலையில் அடுத்த படத்திற்கான பணிகளில் விஜய் காவனம் செலுத்தி வருகிறார்.மேலும் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படகுழிவினர்களை சந்தித்து விஜய் மிகவும் கலகலப்பாக உரையாடி இருக்கிறார் விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் அதனை விட திரைக்கதை வெயிட்டாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளாராம்.

தற்பொழுது உரையாடலின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் வாரிசு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தளபதி 67 படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்கள்.