சினிமாவில் நடக்கின்ற விஷயங்களை நேர்பட பேசுவது தயாரிப்பாளருக்கு கே ராஜனின் வழக்கம். இவர் சமீபத்தில் கண்மணி பாப்பா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் இந்த திரைப்படத்தை சுந்தர்ஜி மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் தமன்குமார், மீனாட்சி, சிறுமி மானஸ்வி, சிங்கம்புலி, சிவம், சந்தோஷ் சரவணன், நாக மாசி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை இராஜதுரை ஒளிப்பதிவு செய்துள்ளார் இந்த படத்திற்கு இசை தேவி இசையமைத்துள்ளார் இந்த இசை விழாவில் ராஜனுடன் இணைந்து நடிகர் ஆரி அசோக் ஈரோடு மகேஷ் போன்ற பலர் கலந்து கொண்டனர் இந்த இசை விழாவில் பேசிய கே ராஜன் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுந்தர் நேற்று என்னை இந்த படத்தின் நிகழ்ச்சிக்கு அழைத்தால் சின்ன படம் என்றால் நான் கண்டிப்பாக வருவேன் என்றேன். இந்த படத்தின் டைட்டில் தமிழ் டைட்டில் என்பது மிக அழகான ஒரு விஷயம்.
தமிழ் பேசும் நடிகைகள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் தயவுசெய்து ஹீரோக்களும், இயக்குனர்களும் மனது வைக்க வேண்டும் ஏனென்றால் இப்பொழுதெல்லாம் நடிகைகள் தேர்வில் தயாரிப்பாளர்கள் முடிவு இல்லை. தயாரிப்பாளர் படத்தை தயாரிக்க காசுகளை மட்டுமே கொடுக்கிறார் சூட்டிங் என்ன நடக்கிறது என்பதை ஆராய மாட்டார்கள் ஏன் இதைச் சொல்கிறேன்.
என்றால் ஜெய்பீம் படத்தில் அந்த காலண்டர் விஷயம் எப்படி தயாரிப்பாளர்கள் தெரியாமல் இருக்கும் என்று சிலர் கேட்கின்றனர் உண்மையில் தயாரிப்பாளர் ஷூட்டிங்கில் எதுவுமே தெரியாது. சின்ன படம் எது பெரிய படம் என்றால் என்னைப் பொருத்தவரை பிகில் சின்ன படம் அது நஷ்டம் எந்த படம் வெற்றி பெறுகிறதோ அதுதான் பெரிய படம்.
மேலும் பேசிய அவர் அடுத்த வாரம் நான் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இருக்கிறேன் அவரிடம் தமிழ் பெயர் வைக்கும் படங்களுக்கு மட்டுமே மானியம் கொடுங்கள் என்று சொல்ல போகிறேன் இந்த கண்மணி படம் மிக நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறினார்